கொட்டாவி ஏன் வருதுன்னு தெரியாதா? அப்போ முதல்ல இதப் படிங்க…
கொட்டாவி என்ப்படுவது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து வாய், மூக்கு வழியாக ஒரே நேரத்தில் சுவாசிக்கும் ஒரு நிகழ்வை குறிக்கும்.
மனிதர்கள் மட்டுமன்றி சில விலங்குகளுக்கும் இது நிகழ்கின்றது. பொதுவாக கொட்டாவி விடுதல் பெரும்பாலும் தூக்கத்துக்கு முன்னும் பின்னுமோ கடுமையான வேலைக்குப் பின்னோ, பிறரிடம் இருந்து தொற்றுவதன் மூலமோ ஏற்படுகிறது.
ஆனால் கொட்டாவி எதற்காக வருகின்றது என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. அதற்காக முழுமையாக விளக்கத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
கொட்டாவி வருவதற்காக உறுதியான காரணம் தெரியாவிட்டாலும், நிபுணர்களின் கருத்துப்படி, கொட்டாவியானது தூக்கமின்மையின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
மேலும் இது அதி தீவிரமாக மற்றவர்களுக்கும் தொற்றக்கூடியது என்றே சொல்லலாம். ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்த அடுத்த நொடியே நமக்கும் கொட்டாவி வந்துவிடும்.
ஆனால், மூளையின் வேகம் குறைந்துவிட்டதை உடல்மொழி மூலம் உணர்த்தும் ஒரு செயலே கொட்டாவி என்கின்றனர் நிபுணர்கள். இவ்வாறு தினமும் கொட்டாவி வந்தால் நாள் ஒன்றுக்கு 7 இலிருந்து 8 மணி நேரத்திற்கு நன்றாக தூங்க வேண்டும்.
தூக்கமின்மை, சோர்வு, மனஅழுத்தம், பதற்றம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் போன்ற தூக்கக் கோளாறுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள், நீரிழப்பு, உடல் வலிகள், சுவாச பிரச்னைகள் போன்றனவும் கொட்டாவி ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாக பார்க்கப்படுகின்றது.
அடிக்கடி கொட்டாவி வந்தால் யோகா, தியானம், உடற்பயிற்சி, என்பவற்றை செய்ய வேண்டும்.இரவில் தூங்க செல்லும் போது செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். காபி, டீ மற்றும் மது அருந்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இது ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவி செய்யும்.
அடிக்கடி கொட்டாவி வருபவர்களுக்கு வலிப்பு அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளில் அறிகுறியாக இருக்கலாம். மேலும், கொட்டாவி அதிகமாக வருவதாக உணர்ந்தால், மருத்துவரை அணுகி உடனே பரிசோதனை செய்து கொள்ளவேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |