இந்த கலர் ஆடை போடுங்க.. வீடு தேடி வரும் வெற்றி
பொதுவாக நாம் தினமும் பயன்படுத்தும் ஆடைகள் மற்றும் பொருட்கள் அனைத்திலும் நிறம் முக்கிய பங்காற்றுகிறது.
வெறும் வெளித்தோற்றத்திற்காக ஆடை அணிவதை விட அதிர்ஷ்டத்திற்காக அணியும் பொழுது மனநிலை, சிந்தனை மற்றும் தோற்றம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும்.
வேத ஜோதிடக் கோட்பாடுகளின்படி, ஒவ்வொரு கிரகத்திற்கு ஒவ்வொரு நிறம் உள்ளது. அந்த நிறம் நமது வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றல்களை கவர்ந்து இழுக்கும்.
கிரகங்களின் ஆதிக்கத்தின்படி நாம் ஆடை அணியும் பொழுது நல்ல பலன்களை பார்க்கலாம்.
அப்படியாயின், என்னென்ன கிரகங்களுக்கு என்னென்ன நிறம் என்பதையும் அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் பற்றியும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
கிரகங்களும், நிறங்களும்
1. சூரியன் (Surya)
கிரகங்களின் அதிபதியாக இருக்கும் சூரியன், ஆற்றல், ஆரோக்கியம், அதிகாரம், தன்னம்பிக்கை ஆகியவற்றின் வெளிபாடாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகத்தின் ஆதிக்கம் கொண்டவர்கள் சிவப்பு, ஆரஞ்சு, தங்க நிறம் ஆகிய நிறங்களில் ஆடை அணிந்தால் அவர்களுக்குள் இருக்கும் பண்புகள் குவிக்கப்படுகிறது. அத்துடன் சமூகத்தில் மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும்.
2. சந்திரன் (Chandra)
சாந்தனமான கிரகமாக இருக்கும் சந்திரன், மனநிலை, உணர்ச்சி, குடும்ப பாசம், அமைதி ஆகியவற்றின் வெளிபாடாக பார்க்கப்படுகிறது.
இந்த கிரகத்தின் ஆதிக்கம் கொண்டவர்கள் வெள்ளை, பால் நிறம் மற்றும் லைட் நீல நிறங்களில் ஆடை அணிந்தால் மன நிம்மதி நிலையாக இருக்கும். மன அழுத்தம் கொண்டவர்கள் இது போன்ற நிறங்கள் அணியும் பொழுது அவர்களுக்குள்ளும் ஒரு அமைதி பிறக்கும்.
3. செவ்வாய் (Mars)
செவ்வாய் கிரகத்தின் தாக்கம் கொண்டவர்கள் தைரியம், வீரியம், உடல் சக்தி ஆகியவற்றில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிவப்பு மற்றும் ஆழ்ந்த சிகப்பு நிறங்கள் ஆடை அணியும் பொழுது அவர்கள் தன்னம்பிக்கை பிறக்கும். அதே போன்று இந்த கிரகத்தின் ஆதிக்கம் கொண்டவர்கள் விளையாட்டு வீரர்கள் அல்லது சவாலான துறைகளில் வேலைச் செய்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |