நோயெதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்காக கொடுக்கும் தடுப்பூசி எது தெரியுமா?
corona
booster dose
By Nivetha
- பூஸ்டர் தடுப்பூசி நம்முடைய உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்காக கொடுக்கும்.
- உலகமே கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
- முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையை இந்தியா சிறப்பாக கையாண்டிருந்தது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
- இதற்கு முக்கிய காரணம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி கொண்டதே ஆகும்.
- முதல் டோஸ், இரண்டாம் டோஸ் என்று தடுப்பூசி போட்டு கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
- எனவே பூஸ்டர் ஊசியை பற்றி சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம். குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இயற்கை காரணங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே தான் முதியவர்களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தி வருகின்றன.
- பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பதிலாக 3வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாமா? என்று நீங்கள் கேட்கலாம். மூன்றாவது டோஸ் போதுமான நோயெதிர்ப்பு சக்தியை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அது குறைந்த செயல்திறன் மிக்கதாக மாறும்.
- அதனால் தான் முதல் மற்றும் இரண்டாம் தவணைகளுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றனர் மருத்துவர்கள்.
- பூஸ்டர் தடுப்பூசி நம்முடைய உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்காக கொடுக்கும்.
- மூன்றாவது டோஸ் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்று தெரியவில்லை.அதனால் தான் அதற்கு முன்பு பூஸ்டர் தடுப்பூசி போடுவது சிறந்தது.
- பூஸ்டர் தடுப்பூசியானது இரண்டாம் தவணையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகே செலுத்தி கொள்ள வேண்டும்.
- ஏனென்றால், ஆன்டிபாடிகள் குறையத் தொடங்கும் நேரம் என்பதால் அப்போது அதன் வீரியம் அதிகமாக இருக்கும்.
- பூஸ்டர் தடுப்பூசியையும், 3வது தவணை கொரோனா தடுப்பூசியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமே செலுத்திக்கொள்ள வேண்டும்.
- தற்போது இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது. பூஸ்டர் ஷாட் என்ற பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படும் பட்சத்தில் இந்திய அரசே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கும்.
- தற்போது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 3வது அலை அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- தற்போது வரை இன்னும் 3வது அலை இன்னும் தொடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தாமதம் ஆவதற்கு கூட வாய்ப்பு உண்டு.
- கொரோனா 2வது அலையின் போது நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போனது. தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது.
- உலக அளவிலும் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.
-
நம்மைச் சுற்றியுள்ள அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சியாக பெறும்போது கொரோனா போன்ற தொற்றுநோய்கள் வரும் அபாயம் குறைவு என்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US