வெற்றியின் ரகசியம்: இந்த 7 விடயங்களை தவறியும் யாரிடமும் சொல்லாதீங்க...
மனிதர்களாக பிறந்த அனைவருமே பிறப்பில் திறமைசாலிகள் தான் ஆனால் நாம் வளரும் போது கற்றுக்கொள்ளும் பழக்கங்கள், பழகும் ஆட்கள், வாழும் சூழல் போன்ற பல விடயங்கள் நமது வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் மீண்டும் முயற்சி செய்யும் ஆற்றல் மற்றும் ஆர்வம் இருப்பவர்களின் வெற்றியை யாராலும் தடுக்கவே முடியாது.
வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால் நாம் குறிப்பிட்ட சில தனித்துவமான கொள்கைகளை கொண்டிருக்க வேண்டிது அவசியம்.
அப்படி வாழ்வில் பல தோல்விகளை கடந்து வெற்றிப்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம், வாழ்வில் சாதிக்க வேண்டுமாயின் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள கூடாத 7 விடயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1.வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால், உங்களின் கனவுகள் குறித்து யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாதீர்கள்.அதை செய்து முடிக்கும் வரையில் ரகரியமாக வைத்திருங்கள். இந்த பழக்கம் விரைவில் உங்கள் இலக்கை அடைவதற்கு துணைப்புரியும்.
2. நீங்கள் செய்த தவறுகளை மற்றவர்களிடம் சொல்லும் குணத்தை முற்றிலும் விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தை உங்களின் வெற்றிப் பயணத்திற்காக படிகளாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் தவறுகளை உங்களால் கண்டுப்பிடிக்க முடிவது தான் அறிவின் உச்சம்.
3. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் பழக்கங்களை பொது வெளியில் ஒருபோதும் விளம்பரப்படுத்தாதீர்டகள்.
4.தங்களின் தற்போதைய நிதி நிலைமையை தொடர்பிலும் வருமானம் தொடர்பிலும் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு எதிராக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த விடயங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
5. உங்களின் தனிப்பட்ட உறவுகள் குறித்து பெரிதாக யாரிடமும் சொல்லிக்கொள்ளும் பழக்கத்தை உடனே நிறுத்திவிடுங்கள். இது உங்களின் வெற்றிக்கு பல வழிகளிலும் தடையாக இருக்கலாம்.
6.வெற்றியாளராக வேண்டும் என்று உண்மையாக ஆசைப்படுகின்றீர்கள் என்றால், உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும் ரகசிய பழக்கங்கள் தொடர்பில் வெற்றியடையும் வரை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாதீர்கள்.
7.உங்களகுள் இருக்கும் பாதுகாப்பு பிரச்சிரைனகள் மற்றும் நீங்கள் அதிகம் பயப்படும் விடயங்களை யாரிடமும் சொல்லாமல், அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள் இந்த 7 பழக்கங்களை உருவாக்கிக்கொண்டால் உங்களின் இலக்கை எளிதாக அடையலாம் என சாதனையாளர்களின் வரலாறு குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |