எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் இலை- எப்படி-ன்னு தெரியுமா?
மூட்டு வலி, கை கால் வலி, இடுப்பு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தர நிவாரணம் பலரும் தேடிக் கொண்டிருப்பார்கள்.
இது சரியாக 40 வயதை கடந்தவர்களை தாக்கும் நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஆனால் தற்போது 20 வயதை கடந்தவர்கள் கூட எலும்பு ஆரோக்கிய குறைபாட்டு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள்.
எலும்பு தொடர்பான பிரச்சினைகள் வரும் பொழுது அதனை மருந்துவில்லைகளால் சரிச் செய்வதிலும் பார்க்க கை மருந்துகளால் குணப்படுத்த முயற்சிக்கலாம். ஏனெனின் இதுவே நிரந்தர தீர்வாகவும் இருக்கும்.
அப்படியாயின் எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு என்ன மாதிரியான கை வைத்தியங்கள் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எலும்பொட்டி செடி
பொதுவாக நம் வீடுகளில் அழகுக்காக நிறைய செடி வகைகளை வைத்திருப்போம். அப்படியொரு செடி வகை தான் எலும்பொட்டி செடி. இந்த வகை செடியில் இருக்கும் இலையை பறித்து அரைத்து மூட்டு வலியுள்ளவர்கள் வலியுள்ள காலில் கட்டி விட்டால் சில நாட்களில் மூட்டு வலி குணமாகி விடும்.
எலும்பொட்டி இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதன் பின் அந்த சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து தினமும் எலும்பு பிரச்சினையுள்ள இடத்தில் தேய்த்து வந்தால் நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.
சவ்வு விலகல், தொண்டை புண், காயங்கள் உள்ளிட்ட பிரச்சினையால் அவஸ்தைப்படுவர்கள் எலும்பொட்டி இலையை அரைத்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி பால், தேன் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |