கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வைட்டமின் டி அவசியம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சரிவிகித்தில் உணவில் எடுத்துக்கொள்ள வில்லை என்றால் நிச்சயம் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும்.
போதுமான ஊட்டச்சத்து உடல்நலத்திற்கு அடிப்படையானது எனவே தினசரி உணவில் எந்த வித ஊட்டச்சத்து குறைப்பாடும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.
உலக சுகாதார தாபனத்தின் கருத்துப்படி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதே முழுமையான ஆரோக்கியம்.
அந்தவகையில் நாம் தினசரி உணவை எடுத்துக்கொள்ளும் போது வைட்டமின்கள் தொடர்பில் குறிபிட்ட சில விடயங்கள் குறித்து தெளிவான விளக்கம் இருந்தால் மட்டுமே ஊட்டச்சத்து மிக்க உணவு முறையை பின்பற்ற முடியும்.
அந்தவகையில் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்க வகிக்கும் கால்சியத்தை முழுமையாக பெறுவதற்கு வைட்டமின் டி எவ்வாறு துணைப்புரிகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கால்சியம்-வைட்டமின் டி என்ன தொடர்பு ?
கால்சியம் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிப்பதுடன், இதய ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாதது.
நாம் உண்ணும் உணவிலுள்ள கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு உடலுக்கு வைட்டமின் டி அவசியம் தேவைப்படுகிறது.
வாழ்நாள் முழுவதும் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்காதவர்களுக்கு, அவர்களின் பிற்காலத்தில் மெல்லிய மற்றும் உடையக்கூடிய எலும்புகள் (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
மெல்லிய மற்றும் உடையக்கூடிய எலும்புகள் எளிதில் உடைந்து கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் குழந்தை பருவத்திலும் பெரியவர்களிடமும் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி பெறுவது இன்றியமையாதது.
வயதாகும்போது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், எலும்பு முறிவுகளையும் ஊறாவையயும் தடுக்கவும் கால்சியம் பெரிதும் உதவுகிறது.
உடல் தசைகள் கால்சியத்தை உறிஞ்சி நன்றாக வேலை செய்ய வைட்டமின் D ஐயும் பயன்படுத்துகிறது.
உங்கள் தசைகளுக்கு போதுமான கால்சியம் கிடைக்கவில்லை என்றால், அவை தசைப்பிடிப்பு, காயம் அல்லது பலவீனத்தை ஏற்படுத்தும்.
நீண்ட கால (நாள்பட்ட) தசை வலியை உயர்ந்தால் கால்சியம் குறைப்பாடு இருப்பதாகவே அர்த்ம் இதனை நிவர்த்தி செய்ய கால்சியத்துமன் போதுமான வைட்டமின் டி பெறுவது இந்த சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.
போதுமான வைட்டமின் டி கிடைக்காத குழந்தைகள் மற்றவர்களின் வயதை விட வளர மாட்டார்கள். கால்சியம் குறைப்பாடு நீடிக்கும் பட்சத்தில் எலும்புகள் வலுவிழக்கச் செய்யும் ரிக்கெட்ஸ் என்ற அரிய வகை நோய் வருவதற்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
கால்சியத்துடன் வைட்டமின் டி எடுத்துக்கொள்வது முக்கியம். கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது என்ற விடயம் தெரிந்திருந்தால் மாத்திரமே கால்சியம் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |