வெறும் வயிற்றில் முருங்கை கீரையை மென்று சாப்பிட்டால் என்ன பலன்? இந்த நோய் வராதாம்..
பல்வேறுப்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கொலஸ்ட்ரால் மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் காணப்படும். இது ஒரு மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருளாக இருக்கும்.
இந்த ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் செரிமானத்திற்கு தேவையானதை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இப்படி உடலுக்கு தேவையான கொலஸ்ட்ராலை எமது உடல் உற்பத்தி செய்தாலும் அது நாம் உண்ணும் உணவுகள் மூலமும் கொலஸ்ட்ரால் உடலில் சேர்கிறது. இந்த கொலஸ்ட்ரால் உடலில் இரண்டு வடிவங்களில் நகர்கிறது. ஒன்று HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால்.
இதில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக சேரும் போது, அது இரத்தக்குழாய்களில் படிந்து இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் பல்வேறுப்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளும் வர வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ரோலை மருந்து வில்லைகள் குடித்து கரைய வைப்பதை விட, இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை வைத்து சரிச் செய்யலாம். அப்படியான மூலிகைகள் என்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. முருங்கை இலைகள்
உடலுக்கு நன்மையளிக்கும் முருங்கை இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதனை இலைகளாகவும், பொடியாகவும் உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
அதிலும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடும் பொழுது உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இதயம் தொடர்பான நோய்கள் வரக்கூடாது என்றால் முருங்கை இலைகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
2. பாகற்காய் இலைகள்
கசப்புச் சுவையைக் கொண்ட பாகற்காயை சாப்பிடுவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. இரத்த சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க நினைப்பவர்கள் பாகற்காய் இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். ஏனெனின் இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளுடன் போராடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |