Sunday special: சிக்கனை மிஞ்சிய சுவையில் உருளைக்கிழங்கு 65...எப்படி செய்வது
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், புதிய வகையில் உணவுகளை சுவையாக சமைத்து சாப்பிடுவதற்கு நேரம் கிடைக்கும்.
அந்த வகையில் அசைவ பிரியர்களும் விரும்பும் சைவ உணவு என்றால் அது நிச்சயம் உருளைக்கிழங்காகத்தான் இருக்கும்.
அந்தளவுக்கு உருளைகிழங்கு தனித்துவமாக சுவை கொண்டதாக காணப்படுகின்றது. உருளைக்கிழங்கு எந்த வகையான காய்கறியுடனும் சேர்த்து சமைக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
உருளைக்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
குறைந்த இரத்த அழுத்தம் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதுடன் சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்வதில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கின்றது.
அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் உருளைக்கிழங்கை வைத்து சின்னன் சுவையே தோற்றுப்போகும் அளவுக்கு அசத்தல் சுவையில் எவ்வாறு சிக்கன் 65 செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
உப்பு - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் -1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கரம் மசாலா - 1/4 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
எலுமிச்சை - பாதியளவு
அரிசி மாவு - 2 தே.கரண்டி
சோள மாவு - 2 தே.கரண்டி
மைதா மாவு - 2 தே.கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்னை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீரை் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பாதியளவுக்கு வேகவைத்து தண்ணீரை வடிக்கட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் உருளைக்கிழங்குடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்றான கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து, சிக்கன் 65 பதத்திற்கு பிரட்டி, மூடி 10 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்நிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு 65 தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |