குழந்தைகளுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும்100 நாள் இருமல்? அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க
பொதுவாகவே குளிர் காலம் ஆரம்பித்துவிட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவது இயல்பு தான்.
ஆனால் சிறுவர்களின் உயிருககே ஆபத்தை ஏற்படுத்தும் 100 நாள் இருமல் குறித்த விரிவான விளக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

100 நாள் இருமல் என்றால் என்ன?
100 நாள் இருமல், கக்குவான் இருமல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இது மருத்துவ ரீதியாக பெர்டுசிஸ் என்று அடையாளப்படுத்தப்படுகின்றது. முதலில் சாதாரண ஜலதோஷமாக ஆரம்பிக்கும் இந்த இருமல் பல வாரங்கள் மற்றும் மாதங்கள் வரையில் கூடதொடர்கிறது.

மற்றவர்களுக்கு எளிதில் தொற்றக்கூடிய சுவாச தொற்று பாக்டீரியா Bordetella pertussis மூலம் இது ஏற்படுகிறது.
இந்த தொடர் இருமல் இருக்கும் ஒரு நபர் மூச்சு விடும் போது மிகவும் தனித்துவமான ஒலி ஏற்படுகிறது.அதனால் இந்த இருமல் Whooping cough எனவும் அழைக்ப்படுகின்றது.
இதற்கு ஏன் கக்குவான் இருமல் என்று பெயர் வந்தது என்றால், இந்த இருமல் ஒரு தடவை ஏற்படும் போது குழந்தைகளுக்கு வாந்தியை ஏற்படுத்தும் அளவுக்கு நீடிக்கும்.

இது கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் உயிருக்கே கூட ஆபத்தாக அமையலாம். பிறந்த குழந்தைகளில் இது 3% இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் அறிகுறிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
முக்கிய அறிகுறிகள்
இந்த 100 நாள் இருமல் பல்வேறு நிலைகளில் பரவும். ஆரம்பத்தில், மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் சளி போன்ற லேசான இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.
நோய்த்தொற்றின் காலம் அதிகரிக்கும் போது, ஒரு நபர் சில இருமல் நோய்களும், மூச்சு விடும் போது ஓசையும் வருகிறது. வாந்தி, சோர்வு போன்றவையும் ஏற்படலாம். இந்த மோசமான இருமல் பல வாரங்கள் வரையில் நீடிக்கும் தன்மை கொண்டது.

இது வேகமாக பரவும் தொற்று நோயாக இருப்பதால், குழந்தைகளுக்கு டிப்தீரியா டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்ற தடுப்பூசிகளை போட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகளுக்கு கடுமையான இருமல், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |