குழந்தைகளுக்கு காது குத்த சரியான வயது எதுன்னு தெரியுமா? அறிவியல் காரணங்களுடன் விளக்கம்
பொதுவாகவே நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு விடயங்களுக்கும் பின்னால் ஒரு துள்ளியமான அறிவியல் காரணமும் நிச்சயம் இருக்கும் என்றால் மிகையாகாது.
அந்தவகையில் நமது முன்னோர்கள் எம்மை பின்பற்றுமாறு அறிவுறுத்திய பெரும்பாலான பழக்கவழக்கங்கள் அறிவியல் அடிப்படையைக் கொண்டுள்ளது என்பதை தற்காலத்தில் அறிவியல் ஆய்வுகளும் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆண், பெண் பாகுபாடு இன்றி குழந்தைகள் காது குத்தப்படுவதை ஒரு சடங்காகவே இன்றளவும் சில சமூகத்தவர்கள் பின்பற்றிவருகின்றார்கள். இது வெறுமனே அழகுக்காகவா?என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.
இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களையும், குழந்தைகளுக்கு காது குத்துவதற்கு சரியான வயது எது என்பது குறித்த விரிவான விளக்கத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
காது குத்த சரியாக வயது
காது குத்தும் விழா என்பது, குறிப்பாக தழிழர்கள் மத்தியில் ஒரு பாரம்பரிய நிகழ்வாகவே கருதப்படுகின்றது. பெரும்பாலானோர், குழந்தையாக இருக்கும் போதே காது குத்திவிடுவார்கள்.
சிலர் பொருளார பிரச்சினை மற்றும் ஏனைய தனிப்பட்ட காரணங்களால் 6 அல்லது 7 வயதுக்கு பின்னரும் கூட காது குத்துவார்கள்.
ஆனால், குழந்தைகளுக்கு எந்த வயதில் காது குத்துவது சரியாக இருக்கும் என்றால், மருத்துவர்களின் கருத்து படி குறைந்தது 6 மாதங்கள் கடந்த பின்னர் காது குத்துவதே சிறந்தது.
காரணம் காது மடல்கள் வளர்ச்சியடைந்துக்கொண்டிருப்பதால், அதற்கு முன்னர் காது குத்தும் பட்சத்தில், தொற்றுகள் அல்லது காயம் ஏற்பட வழிவகுக்கும்.
மேலும் அதற்கு முன்னர் குழந்தையின் நேயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும். இதன் போது தொற்றுகள் ஏற்பட்டால் சிகிச்சையளிப்பதிலும் சிரமம் ஏற்படும்.
6 மாதங்களின் பின்னர் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மருத்துவர் அல்லது ஒரு தொழில் நிபுணரை கொண்டு குழந்தைக்கு சுகாதாரமான முறையில் காது குத்தலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அறிவியல் காரணங்கள்
காது மடல்களில் ஆஸ்துமா போன்ற நோய்களுடன் நெருக்கமாக தொடர்புடையதாக அறியப்படும் பல முக்கியமான அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் புள்ளிகள் காணப்படுகின்றன. அந்த புள்ளிகள் தூண்டப்படுவதால், காது குத்தும்போது ஆஸ்துமாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
இந்த காரணத்திற்காகவே முன்னோர்கள், பாலினத்தைப் பொருட்படுத்தாமல், காது குத்தும் வழக்கத்தை பின்பற்றினார்கள்.
அதுமட்டுமன்றி குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிப்பதிலும் காது குத்துவது பங்களிப்பு செய்கின்றது.
காது என்பது இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப் பகுதியாக இருப்பதால், காது குத்துவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
