இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு இறைவனால் வரமாக கொடுக்கப்பட்ட விடயங்கள் மற்றும் சாபபமாக கொடுக்கப்பட்ட விடங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் உறுதியாக இருக்கும்.
இவர்கள் தங்களை உயர்த்திக்கொண்டே செல்ல வெண்டும் என்ற குணத்தை கொண்டருப்பதால், வாழ்வில் முன்னேற்றத்தை எளிமையாக அடைவார்கள். இதுவே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரம்.
ஆனால் முன்னிலையில் இருக்கும் இவர்களுக்கு எப்போதும் மற்றவர்களிடமிருந்த எதிர்மறையான விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருப்பது தான் இவர்களின் சாபமாக கருதப்படுகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் நேர்மையின் சின்னங்னளாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
நினைத்த விடயத்தை எத்தனை தடைகள் வந்தாலும் செய்து முடிப்பதில் இவர்களுக்கு நிகர் யாரும் இருக்கவே முடியாது.
இவர்களின் பிடிவாத குணம் இவர்களை வாழ்வில் பெரிய இடத்துக்கு கொண்டு செல்வதால் இதுவே இவர்களின் வரமாகும்.
ஆனால் இந்த பிடிவாத குணம் காரணமாக நினைத்ததை தவிர வேறு எது கிடைத்தாலும் இவர்களின் மனம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை இதுவே இவர்களின் சாபமாக இருக்கின்றது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். எந்த சூழலிலும் இவர்களின் இந்த குணத்தை சிறப்பாக வாழ முடியும்.
மற்றவர்களை சாமர்த்தியமாக பேசிய மயக்கிவிடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இந்த சூழ்நிலையிலும் தங்களின் ஆழ்மனம் சொல்வதை மட்டமே இவர்கள் செயல்படுத்துவார்கள்.
இது இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை கொடுக்கும். இதுவே மிதுன ராசியினர்களுக்கு கிடைத்திருக்கும் வரம்.
ஆனால் எந்த விடயத்திலும் சந்தேகித்து நம்பலாமா வேண்டாமா என்கிற இரட்டை மனநிலையில் தவித்துக்கொண்டே இருப்பார்கள் இதுவே சாபமாக அமைகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |