மிக பயங்கரமான 2022! நடக்கப்போவது என்ன? பாபா வாங்கேவின் கணிப்பு
இன்னும் சில நாட்களில் 2022ம் ஆண்டை நாம் வரவேற்க இருக்கிறோம், 2019ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உலக நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என பல இன்னல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பிறக்கும் புத்தாண்டு மக்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே பலரது பிரார்த்தனை, இந்நிலையில் 2022ம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை பாபா வாங்கே கணித்துள்ளார்.
யார் இந்த பாபா வாங்கே?
பல்கேரியாவை சேர்ந்த பாபா வெங்காவின் உண்மையான பெயர் வெங்கலியா பாண்டேவ சுர்சேவா.
கடந்த 1911ம் ஆண்டு பிறந்து, 1996ம் ஆண்டு இறந்தார் என கூறப்படுகிறது, அவருடைய 12வது வயதில் கடுமையான புயலில் மின்னல் தாக்கி தனது கண்களின் பார்வையை இழந்தார்.
எதிர்காலத்தை பற்றி துல்லியமாக கணிக்கவும் செய்தார், அவர் இறப்பதற்கு முன்பாகவே 5079 ஆம் ஆண்டு இந்த உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துள்ளார்.
2022ம் ஆண்டு என்ன நடக்கும்?
2022ம் ஆண்டில் சுனாமி மற்றும் நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்படும், அவுஸ்திரேலியா மற்றும் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெள்ளம் ஏற்படும், இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போவார்கள் என எழுதியுள்ளார்.
மேலும் 2022ம் ஆண்டு மிக ஆபத்தான வைரஸ் ஒன்று தாக்கக்கூடும் என்றும், தற்போது வரை சைபீரியாவில் உறைந்துள்ள அந்த வைரஸ், உலக வெப்பமயமாததால் வெளியே வரக்கூடும் எனவும் கணித்துள்ளார்.
50° Celsius வரை இந்தியாவில் வெப்பநிலை உயரும், வெட்டுக்கிளிகளின் தாக்கமும் இருக்கும் எனவும் எழுதியுள்ளார், உலக நாடுகள் பலவும் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும் எனவும் கணித்துள்ளார்.
மக்கள் அதிகளவில் தங்களது ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவழிப்பார்கள் என்றும், வேற்றுகிரகவாசிகள் சமிஞ்சைகளை அனுப்புவார்கள் என எழுதியுள்ளார்.