அட இது தெரியாம போச்சே! நயன்தாராவின் உண்மையான பெயர் என்னன்னு தெரியுமா?
நேற்றைய தினம் தனது 41 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை நயன்தாரா பற்றிய ஏராளமான விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லேடி சூப்பர்ஸ்டார் என பெருமையாக அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாகவே மாறியிருக்கிறார் என்றால் மிகையாகாது.

சின்ன குழந்தைக்கும் நயன்தாரா என்றால் நிச்சயம் தெரியும். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் பரீட்சையமான பெயராக மாறிவிட்ட நயன்தாரா என்பது உண்மையில் அவரின் பெயர் இல்லையாம். நயன்தாராவின் உண்மையான பெயர் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர் தனது அதாத்திய நடிப்புத் திறமையால், தற்போது பாலிவுட் வரையில் கொடிக்கட்டி பறக்கின்றார்.

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை தக்கவைத்து வருகின்றார்.
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் இவர் தென்னிந்திய நடிகைகளுள் உச்ச இடத்தை பிடித்துள்ளார்.

நயன்தாரா காஸ்மெடிக்ஸ் பிராண்ட் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகின்றார். அதுமட்டுமன்றி ரவுடி பிச்சர்ஸ் என தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகின்றார்.
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்கும் தவறுவது கிடையாது.

டயானா மரியம் குரியன் to நயன்தாரா
தற்போது 41வயதாகும் நயன்தாரா இன்றும் இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு உடலை இன்றும் அதே இளமை பொழிவுடன் வைத்திருக்கின்றார். இந்நிலையில் இவரின் இயற்பெயர் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈத்து வருகின்றது.

கல்லூரி படிக்கும்போது மாடலிங்கில் ஈடுபட்டுவந்தார் நயன்தாரா. அப்போதுதான் மலையாள இயக்குனரான சத்யன் அந்திக்காட் என்னும் இயக்குனர் நயன்தாராவின் மாடலிங் வேலைகளைப் பார்த்து அவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என கேட்டிருக்கிறார்.
நயன்தாராவும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். மனசினக்கரே என்பதுதான் அந்த படம். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் இயக்குனர் இவருடம் 'உங்களின் பெயரை மாற்ற வேண்டும் சம்மதமா' என கேட்டிருக்கிறார். நயன்தாராவும் மாறிக்கொள்ளலாம் என பதில் கூறியிருக்கிறார்.இதிலிருந்து தான் டயானா மரியம் குரியன் நயன்தாரா என அழைக்கப்படுகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |