கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கும் கம்ப்யூட்டருக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?
நமது முன்னோர்கள் எதையும் காரணம் இன்றி பின்பற்றியது கிடையாது. அந்தவகையில், பொதுவாகவே அனைத்து மதங்களிலும் சாம்பிராணி தூபம் போடும் கலாசாரம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா? முன்னோர் கூறியவை எல்லாம், சுத்த மூட நம்பிக்கை என்று சொல்லி, இன்று பல்வேறு வழிகளில், இயற்கையை விட்டு விலகி, நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டோம்.
ஆனால் அதற்கான உண்மையான காரணம் தெரிந்தால், இன்றைய இளைய சமுதாயமும் அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை நிச்சயம் உணர்ந்துக்கொள்ளும்.
அறிவியல் காரணங்கள்
சாம்பிராணி தூபம் காட்டுவதற்கு ஆன்மீகம் சார்ந்த காரணங்களாக, கடவுளை ஆராதனை செய்வதற்கு, எதிர்மறை ஆற்றல்களை அகற்றுவதற்கு, தெய்வக தன்மையை உருவாக்குவதற்கு என பல காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும், இதன் பின்னணியில் துல்லியமான அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.
சாம்பிராணி புகையை, அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப் புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்குவதற்காகவும் பயன்படுத்தினர்.
குங்குலிய மரத்தின் பிசினில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணிக்கு இயற்கையாகவே காற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றது. அதன் காரணமாகவே கோவில்களிலும், வீடுகளிலும் சாம்பிராணி தூபம் காட்டுகின்றோம்.
பண்டைய காலங்களில் பெண்கள் குளித்த பின்னர் தங்களின் கூந்தலை உலத்துவதற்கு சாம்பிராணி புகையை பயன்படுத்தியமைக்கும் இது தான் காரணம். சாப்பிராணி புகையில் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றது.
மேலும் சாம்பிராணி புகையால் காற்றில் உள்ள கொடிய நோய் கிருமிகளை எளிதில் அழிக்கமுடிவதுடன், இந்த புகையில் காணப்படும் புத்துணர்வு தரும் வாசனை காரணமாக மன அழுத்தம் நீங்கி மனம் ஆறுதல் அடையும். இதுவே சாம்பிராணி தூபம் போடுவதன் அறிவியல் காரணங்களாக அறியப்படுகின்றது.
கம்ப்யூட்டர் சாம்பிராணி
சாம்பிராணிக் கட்டிகள் மற்றும் தூளை பயன்படுத்த வேண்டும் என்றால், அடுப்பு கரி எடுத்து அதை கங்காக்கி அதில் தான் சாம்பிராணியை போட்டு புகையை எழுப்ப முடியும். ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஒரு சிறிய கப் அல்லது வடிவத்தில் வருகிறது.இது எளிதில் கொளுத்தி புகை எழுப்புவதால், அதுகம்ப்யூட்டர் சாம்பிராணி என அழைக்கப்படுகின்றது.
கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கும் கம்ப்யூட்டருக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால், கம்ப்யூட்டர் மனிதனின் வேலையை எளிமையாக்கிய ஒரு முக்கிய சாதனம் என்பதால், அதன் பெயரை பயன்படுத்தினார்கள். இது எளிமையை மட்டுமே குறிக்கின்றது தவிர, கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கும் கம்ப்யூட்டருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |