மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
Cancer
Eye Problems
Pregnancy
By Kishanthini
அசைவ சாப்பாடடில் மீன் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறியவர் முதல் பெரியோர் வரை நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவான மீனில் உள்ள சத்துக்களை பற்றி காண்போம்
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. அதிலும் மீன் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளையே தருகின்றது.
தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

- தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது.
- மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
- மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
- மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
- பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க மீன் பயன்படுகிறது. பெண்கள் மீனை அதிக அளவில் சாப்பிடுவதால் எலும்புகள் பலமடைந்து பிரசவ நேரத்தில் வலியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது.
- மீனை அதிகம் சாப்பிடுபவர்கள் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US