30 வயதை கடந்த ஆண்களா? மோசமான பழக்கங்களால் வரும் 5 நோய்கள்- ஜாக்கிரதை
உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
![Zika virus symptoms: கர்ப்பிணிகளின் கருவை சிதைக்கும் ஜிகா வைரஸ்- அறிகுறிகளுடன், ஆபத்துக்களை தெரிஞ்சிக்கோங்க](https://cdn.ibcstack.com/article/90276601-b5e7-49cb-bde6-47823c5187ed/24-6757fa4dde85e-sm.webp)
Zika virus symptoms: கர்ப்பிணிகளின் கருவை சிதைக்கும் ஜிகா வைரஸ்- அறிகுறிகளுடன், ஆபத்துக்களை தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியத்தில் பெண்களை விட ஆண்கள் கவனம் செலுத்துவது குறைவாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருமணம் முடிந்து 30 வயதை கடந்த ஆண்கள் பணம் சம்பாதிப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள்.
இவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் அதிகமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கிறார்கள்.
இப்படியான ஆண்கள் அதிகமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கவும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழவும் வழிவகுக்கும். அத்துடன் ஆண்கள் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை நாடாமல் இருந்தால் அவர்களின் மருத்துவ பிரச்சினை நாளடைவில் அதிகமாகலாம்.
அந்த வகையில், 30 வயதை கடந்த ஆண்கள் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
30 வயது கடந்த ஆண்களை தாக்கும் நோய்கள்
1. 30 வயதை கடந்த ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் அனுபவிப்பார்கள். அவர்களின் சிறுநீரில் நிறம் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இப்படியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்தவரை நாடுவது சிறந்தது.
2. சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது சிறுநீர்ப்பை தொற்று, சிறுநீரக பாதை தொற்று, சர்க்கரை நோய் போன்றவற்றின் ஆரம்ப அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
3. நெஞ்சு பகுதியில் அசௌகரியம் ஏற்படும். இன்னும் சிலருக்கு இரவு வேளைகளில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
4. இதயம் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். அதிலும் குறிப்பாக நெஞ்சு பகுதி மற்றும் தோற்பட்டை பகுதியில் கூர்மையான வலியை ஏற்படலாம். இது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் உரிய மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
5. ஆண்களுக்கு அவர்களின் அந்தரங்க பகுதியில் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை வெளியில் கூறுவதற்கு கூச்சம் கொண்டு அவர்கள் வெளியில் கூறாமல் இருக்கலாம். உதாரணமாக பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி கட்டிகள் இருப்பதை உணர்ந்தால், அது புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே எந்த வயதுடைய ஆண்களும் இந்த விஷயத்தில் அசால்ட்டாக இருப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
6. வயது அதிகரிக்கும் போது ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் விறைப்புத்தன்மை கோளாறு. இது போன்று விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது குறைவாக இருக்கும். இது காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பு, நரம்பியல் கோளாறுகள், கட்டுப்பாடற்ற அல்லது கடுமையான சர்க்கரை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இது குடிப்பழக்கம் அல்லது போதைப் பழக்கம் போன்ற பழக்கங்களினால் ஏற்படலாம்.
7. சிலரின் உடலில் போதுமான நீர் இருக்காது. இதனால் ஒரு நாளைக்கு அதிகமாக தாகம் ஏற்படலாம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் நீரை தவறாமல் அருந்த வேண்டும். இவற்றை தவிர்த்து அதிகமான தாகம் இருந்தால் அது ஹைப்பர் கிளைசீமியாவின் எச்சரிக்கையாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |