ரிமோட் கண்ட்ரோலில் மாத்திரம் ஏசியை நிறுத்துறீங்களா? அப்போ மின்கட்டணம் அதிகரிக்குமாம்
தற்காலத்தில் மின்சார கட்டணம் அதிகரிப்பது அனைவருக்கும் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. பொதுவாகவே, கோடை காலத்தில் ஏசியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.
இதனால் மின்வார கட்டணத்துக்கு ஈடு கொடுப்பது மிகவும் கடினமான விடயமாகும். எனவே, ஏசியை பயன்படுத்துவோர் வெறுமனே ரிமோட் கண்ட்ரோலில் மாத்திரம் ஏசியை நிறுத்தாமல் ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் ஆப் செய்தால் மாத்திரமே மின்சாரம் கட்டணத்தைசேமிக்க முடியும்.
இத குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பலர் ரிமோட்டில் டைமரை தயாரி தயார் செய்து வைத்தவிட்டு தூங்கிவிடுவர்.
குறித்த நேரத்தை அடைந்ததும் ரிமோட் ஆட்டோமேட்டிக்காக ஆப் ஆகிவிடும். இது அனைவரும் பின்பற்றும் ஒரு எளிய முறை தான்.
ஆனால், ஸ்டெபிலைசர் சுவிட்டை ஆப் பண்ணாவிட்டால் மின்சார கட்டணம் அதிகரிக்கத்ததான் செய்யும்.
எனவே இந்த தவறை தவிர்த்துக்கொள்வதன் மூலம் மின்சார கட்டணத்துக்கு செலவிடும் அதிக பணத்தை சேமித்து முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |