அடிக்கடி கண்ணாடி பாக்கிறீங்களா? அப்போ இந்த நோய் இருப்பது உறுதி
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
அதிலும் இளமை பருவத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தங்களை அழகுப்படுத்திக் கொண்டு கண்ணாடியில் சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா? என பார்ப்பார்கள்.
சிலர் கண்ணாடி முன்னர் நின்று புலம்பி தள்ளுவார்கள். இதனை படங்களை விட நிஜ வாழ்க்கையிலும் அதிகமாகவே பார்க்கலாம். இந்த பழக்கம் நாளடைவில் வேலையில்லாமல் இருந்தால் கூட கண்ணாடி பார்ப்பார்கள்.
எங்கு சென்றாலும் தான் எப்படி இருக்கிறோம் என தெரிந்து கொள்ள கண்ணாடி தேடுவார்கள்.
இந்த பழக்கம் ஒரு நோயின் அறிகுறி என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அப்படியாயின், அடிக்கடி கண்ணாடி பார்ப்பவர்களுக்கு என்ன நோய் வரும் அபாயம் உள்ளது என்பதை பதிவில் பார்க்கலாம்.
கண்ணாடி பார்ப்பது நோயா?
சிலர் அடிக்கடி கண்ணாடி முன்னர் நின்று அவர்களை வேறு வேறு தோரனைகளில் நிறுத்திப் பார்ப்பார்கள். அடிக்கடி பார்க்கும் பொழுது இதுவொரு நோயாக மாறுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நீண்ட நேரம் கண்ணாடி முன் நேரத்தை செலவிடும் பழக்கம் கொண்டவர்கள் சற்று வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். இந்த நோய் “Body Dysmorphic Disorder” என்ற பெயர்க் கொண்டு அழைக்கிறார்கள்.
இது தொடர்பில் மருத்துவர்கள் பேசுகையில், “ அடிக்கடி கண்ணாடி பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள் மன அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். ஏனெனின் அவர்கள் மற்றவர்களிடம் பேச முடியாத விடயங்களை கண்ணாடியிடம் பேசுவார்கள்...” எனக் கூறப்படுகிறது.
நோயின் தீவிரம்
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற மனிதர்கள் முன்னர் திருப்தியாக இருக்கமாட்டார்கள். அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக நடந்துக் கொள்வார்கள்.
Body Dysmorphic Disorder நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வகையிலும் திருப்தியாக்க முடியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மன நோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தாலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களே அதிகமாக கண்ணாடி முன் இப்படி நிற்பார்கள்.
அதிலும் குறிப்பாக அவர்களுடைய அழகில் திருப்தியடைய மாட்டார்கள். இந்த பிரச்சினை சிறுவயது முதல் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு வயது எல்லை என நிபுணர்கள் பதில் கொடுக்கிறார்கள். இந்த நோயின் தாக்கம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கும். அதிலும் இளம் வயதில் இருப்பவர்களுக்கு இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |