தினமும் மேகி சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த உயிர்கொல்லி நோய் உறுதி
மேகி நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாக இருக்கின்றது.
உணவு வகைகளில் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பு இதுதான் என கூறினால் மிகையாகாது.
இன்னும் சொல்லப்போனால் சிலர் இதனையே மூன்று வேலையும் சாப்பிடுவதற்கு கூட தயங்குவதில்லை.அந்தளவு சுவை நிறைந்ததாக காணப்படும் அதே நேரம் இதனை தயார் செய்வதும் மிகவும் சுலபமாக இருப்பதே அதன் சிறப்பம்சமாகும்.
நேரம் கிடைக்காத அளவு கடினமாக உழைப்பதால் சமையலறையில் நுழைவதற்கு கூட நேரம் இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக திகழ்கின்றது.
இதனை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பலரும் கவனம் செலுத்துவது கிடையாது. தினசரி மேகி சாப்பிடுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேகி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து
2 நிமிடத்தில் தயார் செய்ய க்கூடிய மேகி நூடுல்ஸ் வயிற்றுக்கும் உட்புற உறுப்புகளுக்கும் அளப்பரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியது.
அதனால் இந்த உணவினை அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை வலுவாக பாதிக்கும். அதற்கு காரணம், இந்த உணவை அதிகமாக உட்கொண்டவர்கள் பலர் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
நேரமின்மையும், அளவுக்கு அதிகமான வேலை பளுவும் சேர்ந்து மேகி நூடுல்ஸ் போன்ற உடன் உணவுகளுக்கு நம்மை அடிமையாக்கி விட்டது. நாமும் குறுகிய நேரத்தில் சுவையாக சாப்பிட முடியும் என்ற ஒரே காரணத்துக்காக இதனால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய அச்சுறுத்தல்களை மனதில்கொள்வதில்லை.
உடல் ஆரோக்கிய வல்லுனர்களால் ஜங்க் உணவு வகையில் சேர்க்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மைதா சேர்க்கப்பட்டுள்ளது.
வேறு தேவைக்கு பயன்படுத்தி மிஞ்சிய மைதா உமியில் இருந்து தயார் செய்யப்படுவதால் இதில் கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை ஆகியன அதிகமாக காணப்படுவதால் இது உடல் நலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
மேலும் இது சுலபமாக சமிபாடடையாத காரணத்தினால் இதனை தொடர்ச்சியாக சாப்பிடுவது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்களால் எச்சரிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக மேகி சாப்பிடுவதால் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் இது கல்லீரல் புற்றுநோயாவும் மாறலாம்.
அதனால் முடிந்தவரை இவ்வாறான உடன் உணவுகளை தவிர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |