மாலை நேரத்தில் பெண்கள் கையிலிருந்து குங்குமம் தவறினால் ஆபத்தா?
பொதுவாக அனைவரது பூஜை அறைகளிலும் குங்குமம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது வழக்கம்.
காலை மற்றும் மாலை வேளைகளில் இறைவனை வணங்கிய பின்னர் பக்தர்கள் இதனை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வார்கள்.
அத்துடன் சுமங்கலி பெண்கள் குங்குமத்திற்கு என்று ஒரு தனி மரியாதையை கொடுப்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் குங்குமத்தை எடுத்து நெற்றி மற்றும் தாலியின் மேல் வைத்து கொள்வார்கள்.
இவ்வளவு சிறப்பு கொண்ட குங்குமத்தை கீழே கொட்டினால் ஆபத்து என பெரியவர்கள் கூறுவார்கள்.
அந்த வகையில், குங்குமம் தரையில் கொட்டினால் என்ன நடக்கும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குங்குமம் கொட்டினால் என்ன நடக்கும்?
1. கையில் வைத்திருக்கும் குங்குமம் கீழே கொட்டினால் அது உங்களுக்கு வரும் ஆபத்தை முன்னாடியே உணர்த்துகிறது என்று அர்த்தம். இது போன்ற நேரங்களில் செய்யும் வேலைகளில் அதீத கவனம் தேவை.
2. திருமணமான பெண்களின் கையில் இருந்து குங்குமம் தவறினால் அது அவர்களின் கணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக ஆரோக்கியத்தில் பிரச்சினை மற்றும் பணியில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
3. மாலை நேரங்களில் இப்படி குங்குமம் தவறினால் உடலில் நோய் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் வர வாய்ப்பு இருக்கிறது.
4. வெள்ளிக்கிழமை குங்குமம் தவறினால் நீங்கள் எவ்வளவு கட்டுப்பாடுடன் இருந்தாலும் பிரச்சினை உங்கள் வீட்டை தேடி வரும். இதனை சமாளித்து போக தயாராக இருக்க வேண்டும்.
5. குங்குமம் கொட்டியவுடன் வரும் ஆபத்தை நினைத்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இறைவனிடம் அனைத்தையும் ஒப்புக் கொடுத்து விட்டு அமைதியாக இருக்க பழகிக் கொள்ளவும்.
பரிகாரம்
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படியான தவறுகள் நடக்கும் பொழுது பரிகாரங்கள் நல்ல பலனை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |