குழந்தைகளின் உயிரை காவு வாங்க்கூடிய நெப்தலின் உருண்டைகள்! எச்சரிக்கும் மருத்துவர்
பெரும்பாலான வீடுகளில் தற்காலத்திலும் நாப்தலின் உருண்டைகள் பயன்படுத்தப்படுவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
அவ்வளவு ஏன் நீங்களே கூட பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இந்த நாப்தலின் உருண்டைகள் பழங்காலத்தில் கொடிய பூச்சிகளை விரட்ட பயன்படுத்தப்பட்டவை தற்போது எல்லோர் வீடுகளிலும் சர்வ சாதாரணமாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இதில் அடங்கியுள்ள ஆற்றல் மிக்க ரசயனங்கள் குழந்தைகளின் உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.இதனை தவறுதளாக குழந்தைகள் வாயில் வைத்தால் கூட அவர்கள் உயிரிழக்கும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

இது குறித்து குழந்தை நல மருத்துவ நிபுணர் அருண்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவான விளக்கத்துடன் எச்சரிக்கை பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |