உங்க வீட்டு குழந்தை நாணயத்தை விழுங்கி விட்டதா? இத செஞ்சா போதும்
பொதுவாக உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால், அதனை கண்ணின் இமை போன்று வைத்து பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.
ஏனெனின் குழந்தைகள் சிறுவயது முதல் பார்த்து வளரும் விடயங்கள் அவர்களின் ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. பெரியவர்களாக வளர்ந்த பின்னர் சிறுவயது நடந்த விடயங்களின் பிரதிபலிப்பாகவே இருப்பார்கள்.
ஒழுக்கம், கடமை, பொறுப்பு, கவனிப்பு, நிதானம் ஆகியவற்றை கற்றுக் கொடுப்பது அவசியம்.
அப்படி தவறுதலாக உங்களின் குழந்தைகள் நாணயங்களை விழுங்கி விட்டால், பெற்றோர்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் பயத்தில், என்ன செய்வது என மறந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள். அதற்கு முன்னர் வீட்டிலேயே முதலிதவி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், உங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகள் நாணயத்தை விழுங்கி விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

குழந்தை வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்
1. குழந்தைகள் ஒரு வயது வரும் வரை கையில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் வாயில் எடுத்து போடுவார்கள். இதனால் அவர்கள் கண்களில் படும் வகையில் பொருட்களை வைக்காமல் இருப்பது நல்லது.
2. சில சமயங்களில் அவர்கள் அப்படி சாப்பிடும் உணவுகள், பொருட்கள் சுவாச குழாய் அல்லது உணவு குழாயில் அடைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக மாறி விடலாம்.

3. குழந்தைகளுக்கு காரமான பொருட்கள் கொடுப்பதை தற்போது உள்ள தாய்மார்கள் தவிர்க்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தை அனைத்து சுவைகளுக்கு தன்னுடைய நாக்கை பழக்க வேண்டும். காரமான உணவுகளை கொடுப்பது ஆபத்தானது அல்ல என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
4. 3 வயதுக்கு குறைவான குழந்தைகள் கையில் பட்டன், பேட்டரி போன்ற பொருட்களை தவறியும் கொடுக்கக் கூடாது. இது போன்ற பொருட்களை உயிரையே காவு வாங்கும் அளவுக்கு மோசமானது. அவர்களுக்கு நிதானம் வரும் வரை தாய்மார்களின் பார்வையில் இருப்பது நல்லது.
5. நீண்ட நாட்களுக்கு சளி, இருமல் பிரச்சனை இருந்தால், இது சாதாரணமாக எடுக்காமல் மருத்துவரிடம் காட்டலாம். ஏனெனின் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது போன்ற அறிகுறிகளை அடிக்கடி காணலாம்.

6. குழந்தைகள் கண்ணில் படும் வகையில் நாணயங்கள் இருந்தால், அதனை முடிந்தளவு தூரமாக வைப்பது நல்லது. நாணயத்தை குழந்தை விழுங்கிய பின்னர், மூச்சுத்திணறல் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.
7. குழந்தைகள் சிறிய பொருட்களை விழுங்கி விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும். பயத்தில் குழந்தைகள் மயங்கி விட்டால் குழந்தையின் தலையை கீழே சாய்த்து தோள்பட்டைகளுக்கு இடையில் வேகமாக தட்டி முதலுதவி கொடுக்க வேண்டும்.
8. லேசான பாதிப்பு இருப்பது போன்று தெரிந்தால் முதலுதவி செய்வதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனின் சிலர் தனக்கு தான் தெரியும் என்று நிலையை மோசமாக்கி விடுவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |