முடி உதிர்வு, பொடுகு தொல்லை அதிகமாக இருக்கின்றதா? இந்த ஒரு தவறு தான் காரணமாம்
நாம் தினமும் தலை சீவுவதற்கு பயன்படுத்தும் சீப்பினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்களின் பிரச்சனை தலைமுடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனையினால் அவதிப்படுகின்றனர்.
ஆனால் இதற்கு முக்கியமான காரணம் என்னவெனில் அவர்கள் பயன்படுத்தும் சீப்பு ஆகும். ஆம் சீப்பு எவ்வாறு இருக்கின்றது என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

அழுக்கு சீப்பு வேண்டாம்
தினமும் நாம் பயன்படுத்தும் சீப்பை முறையாக சுத்தம் செய்யவில்லையெனில் அவை கூந்தல் மற்றும் உச்சந்தலை பொடுகு போன்ற பிரச்சனைக்கு காரணமாக அமைந்துவிடும்.
நாம் தலை சீவும் போது, முடியிலுள்ள எண்ணெய், அழுக்கு, பொடுகு, இறந்த செல்கள் இவை சீப்பு பற்களில் படிந்துவிடுகின்றது. இதனை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யவில்லை எனில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை காளான்கள் தொற்றிக் கொள்ளுமாம்.

image: shutterstock
அதே போன்று சுத்தமில்லாத சீப்பை பயன்படுத்துவதால், முதல் பாதிப்பாக பொடுகு ஏற்படும். மேலும் சீப்பில் தங்கியிருக்கும் பூஞ்சை மீண்டும் உச்சந்தலைக்கு சென்று பொடுகை அதிகப்படுத்தி, தலை அரிப்பு மற்றும் செதில் போன்று தோல் உதிர்வும் ஏற்படும்.
ஆகவே வாரத்திற்கு ஒருமுறையாவது சீப்பை வெதுவெதுப்பான சோப்பு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்வது அவசியமாகும். சுத்தமான சீப்பை பயன்படுத்துவதால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், தொற்று நோயிலிருந்தும் தலையை பாதுகாக்க முடியும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |