இந்த பிரச்சனை உள்ளவர்கள் ராகியை அளவா தான் சாப்பிடனும்.
அதிக சத்துக்கள் கொண்ட ராகியை யாரொல்லாம் சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்
ராகி
சிறுதானியங்களில் ஒன்றாக இருக்கும் ராகியில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ள நிலையில், தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கின்றது.
மேலும் நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வையும் கொடுக்கின்றது. கேழ்வரகு என்றும் கேப்பை என்றும் ராசி என்றும் அழைக்கப்படுகின்றது.

புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நிலையில், இதனை உப்புமா, கூழ் என செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் ரொட்டியாகவும் இதனை செய்து சாப்பிடலாம்.
ஆனால் இதை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு என்ன தீங்கு ஏற்படும் என்று இங்கு கீழே காணலாம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ராகியில் ஆக்சலேட்டுகள் நிறைய உள்ளன. இது நம் உடலில் பல பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இது சிறுநீரக கல் ஏற்படுத்தும்.
எனவே சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் ராகியை அதிகமாக சாப்பிடக்கூடாது. அப்படியும் சாப்பிட வேண்டும் என்றால் மருத்துவரின் ஆலோசனை கேட்டு சாப்பிடுவது நல்லது

ராகியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமானம் ஆக நிறைய நேரம் எடுக்கும். பொதுவாகவே நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்.
என்றாலும், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் ராகியை சாப்பிடக்கூடாது. இதை நீங்கள் நிறைய சாப்பிட்டால் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படும்.

தைராய்டு பிரச்சனை உள்வர்கள் ராகி சாப்பிடுவதில் கவனம் தேவை. ராகியில் கோய்ட்ரோஜென்கள் அதிகமாக உள்ளது. இதனால் ரைாய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் இவர்களும் கவனமாக சாப்பிட வேண்டும்
ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் ராகி சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் இது அவர்களுக்கு தோல் தடிப்புகள், அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |