உடம்பு இரும்பு மாதிரி இருக்கனுமா? எள்ளு பொடி சாதம் செய்யும் அற்புதம்
சத்துக்கள் அதிகம் கொண்ட எள்ளுப் பொடி சாதம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அவர்களின் மதிய உணவிற்கு என்ன சாதம் செய்து கொடுப்பது என்ற யோசனை பெரும்பாலான பெற்றோர்களுக்கு இருக்கும்.
கலவை சாதத்தினை மாற்றி மாற்றி கொடுத்து வருவார்கள். அதில் ஒரு சாதத்தினை தான் தற்போது தெரிந்து கொள்ள போகின்றோம்.
எள்ளு விதையில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் நிறைந்த எள் பெண்களுக்கு மிகச்சிறந்த உணவாக இருக்கின்றது. தற்போது எள்ளைக் கொண்டு எள்ளுப் பொடி சாதம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்
எள்ளு - ¼ கப்
உளுந்தம் பருப்பு - ¼ கப்
கடலை பருப்பு - ¼ கப்
வர மிளகாய் - 5
அரிசி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - 2 கொத்து
தாளிக்க
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - ¼ டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
எள்ளை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அரிசியையும் இரண்டு மூன்று முறை தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து அதனை வேக வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து அதில் உளுந்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்பு அதே கடாயில் கடலை பருப்பு மற்றும் வரமிகாய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். கழுவி வைத்த எள்ளையும் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
கடாயில் கடலை பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக சிவக்கும்படியாக வறுத்து ஆற வைக்கவும். பின்பு கடாயில் எள்ளை சேர்த்து அது நன்றாக வெடிக்கும் வரை மிதமான தீயில் வைத்து வறுத்து ஆற வைக்கவும்.

கடைசியாக கடாயில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து பின்பு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும், உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வேர்க்கடலை வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். கடாயினை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். இதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
பின்பு அரைத்து வைத்த பொடியை தேவையான அளவு சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி விடவும். கடைசியில் வேக வைத்துள்ள சாதத்தினை உள்ளே சேர்த்து கிளறினால் எள்ளு பொடி சாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |