புது மருமகளுக்கு நிதா அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அவரது மனைவிற்கு நீதா அம்பானி பெறுமதியான பரிசுகளை வழங்கியுள்ளார்.
அம்பானி குடும்பத்தின் பிரம்மாண்ட திருமணம்
உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் வருகிற மார்ச் மாதம் முதலாம் திகதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவிருக்கிறது.
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.
அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சொல்லவா வேண்டும்? இதற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நீதா அம்பானி தனது இளைய மருமகளுக்கு பெறுமதி மிக்க பரிசுகளை வழங்கி வருகிறார்.
பெறுமதியான பரிசு வழங்கும் நீதா அம்பானி
முதல் முறையாக வெள்ளியில் செய்யப்பட்ட லக்ஷ்மி - விநாயகர் சிலையை வழங்கியுள்ளார்.
இரண்டு வெள்ளி துளசி மாடம், வெள்ளி லட்சுமி-கணேஷ் சிலைகள், வெள்ளி தூபக் குச்சிகள் அடங்கிய பூஜை அறை பொருட்களைத் தான் பரிசாக கொடுத்துள்ளார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு முகேஷ் அம்பானி சுமார் ரூ. 4.5 கோடி மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் வழங்கியுள்ளார்.
ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். ஆகவே மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் உள்ள தி கிராண்ட் தியேட்டரில் ஒரு பிரம்மாண்டமான அரங்கேற்றத்தையும் செய்துக்கொடுத்துள்ளார்கள்.