இத குழந்தைக்கு கொடுக்காதீங்க.. பிரச்சனைகள் வரலாம்
பொதுவாக உணவு விடயத்தில் பெரியவர்களை விட குழந்தைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனின் அவர்களுக்கு கொடுக்கும் உணவுகள் வெறும் பசிக்காக இல்லாமல் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் இருக்க வேண்டும்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொழுது அதன் சுவைக்காக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் காலப்போக்கில் அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.
குழந்தைகளை கண்ணாடிகள் போன்று பாதுகாக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் கவனத்தில் கொள்வது அவசியம். குழந்தைகளை ஆரம்ப பருவங்களில் கவனிக்காவிட்டால் அவருக்கு வயது வர வர வேறு விதமான நோய்களை உண்டு பண்ணும்.
அப்படியாயின், நாம் வழக்கமாக கொடுக்கும் உணவுகள் அடிக்கடி கொடுத்து வந்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதனை தடுப்பதற்கு முன்னர் அந்த உணவுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. வாழைப்பழம்
சிலர் வீடுகளில் இருக்கும் பாதி பழுத்த வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும் பொழுது வாழைப்பழத்திலுள்ள அதிகளவு மாவுச்சத்து, நார்ச்சத்து செரிமான கோளாறுகளை உண்டு பண்ணும். நன்றாக பழுத்த பழங்களை கொடுப்பது சிறந்தது.
2. பால் பொருட்கள் மற்றும் பால் அதிகமாக கலக்கப்பட்ட உணவுகள்
பால் கொண்டு செய்யப்படும் உணவுகளில் கால்சியம், புரதம் அதிகமாக இருக்கும். இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். குழந்தைக்கு பால் கொடுப்பது ஆரோக்கியம் என்றாலும் அளவுடன் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனின் அதிகமாக பால் கலக்கப்பட்ட உணவுகளில் குறைந்த நார்ச்சத்து அதிக கொழுப்பு இருக்கும். இது குழந்தைகளின் மலத்தை இறுக்கமாக்கும்.
3. ஆப்பிள் சாஸ்
பழங்களில் மிக ஆரோக்கியமான பழமாக இருக்கும் ஆப்பிள் பழத்தை பழமாக சாப்பிடும் பொழுது கிடைக்கும் ஆரோக்கியம் சாஸாக எடுத்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சாஸ் வகைகள் கொடுப்பது குறைப்பது நல்லது.
4. வெள்ளை அரிசி
நார்ச்சத்து குறைவாக இருக்கும் வெள்ளை அரிசி கொண்டு சமைத்த உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக பார்லி, ஓட்ஸ் கொடுக்கலாம். இது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
5. கேரட்
சில தாய்மார்கள் குழந்தைக்கு கிழங்கு வகைகள் சாப்பிடக் கொடுத்தால் ஆரோக்கியம் தரும் என நினைக்கிறார்கள் ஆனால் குழந்தைகளுக்கு கேரட் வேக வைத்து அதிகமாக கொடுத்தால் அது அவர்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். துருவி கேரட் சாப்பிடக் கொடுக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட அல்லது பாக்கட்களில் அடைக்கப்பட்ட உணவுகள் சற்று விலை குறைவாக இருக்கும். ஆனால் அது வயிற்றில் ஏகப்பட்ட வேலைகளை செய்யும். அடிக்கடி வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் இதிலுள்ள கலவைகள் குழந்தைகளுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |