இனி குடிக்காதீங்க.. இதய நோயாளர்களுக்கு கடும் பாதிப்பு
உலகம் முழுவதும் இதயம் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகி வருகின்றது.
தவறான உணவு பழக்கங்கள், ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால் இதய நோய் பாதிப்புக்கள் வருகின்றன. இதயத்திற்கு ஆரோக்கியமில்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவு அதிகமாகி இறுதியில் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது.
நாம் தினமும் தவறான உணவு பழக்கத்தினால் உற்பத்தியாகும் கலோரிகள் எரிக்கப்படாமல் அப்படியே இருந்தால் அது நாள்ப்பட்ட நோய்களை ஏற்படுத்தி விடும். ஏனெனில் கடினமான உணவுளை இலகுவில் ஜீரணிக்க முடியாது.
அதே போன்று அவை கொலஸ்ட்ரால் அளவையும் நச்சுத்தன்மையையும் அதிகமாக்கி விடும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை கடைபிடிப்பது அவசியம்.
அப்படியாயின், இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மறந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. உப்பு
உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்களுக்கு இதய நோய் பாதிப்பு வருவதற்கு அதிகளவு வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான உப்பு எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்த அழுத்தம் அதிகமாகி இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
2. வெள்ளை அரிசி, ரொட்டி
பொதுவாக இதயம் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் வெள்ளை நிற உணவுகளை தவிர்ப்பார்கள். அதே சமயம் பீட்சா போன்ற துரித உணவுகளையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். கார்போஹைட்ரேட் உணவுகளில் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதிக GI உணவுகளை உட்கொள்ளும் பொழுது இதய நோய் பாதிப்பு வரலாம்.
3. மென் பானங்கள்
மென்மையான காற்றோட்டமான பானங்கள் இவர்கள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது போன்ற மென் பானங்களில் அதிக அளவு சர்க்கரை நிரம்பியிருக்கும்.
இது அதிக உடல் பருமன், அதிக இரத்த சர்க்கரை மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தி விடும்.
4. சிவப்பு இறைச்சி
கடைகளில் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் சிவப்பு இறைச்சியில் கார்னைடைன் உள்ளது. இது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி நிறைவுற்ற கொழுப்பாக சேர்ந்து இதயம் தொடர்பான நோய்களை தீவிரப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |