ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ தீர்வு- செய்து பாருங்க
ஆஸ்துமா நோயாளர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருப்பார்கள்.
இவர்கள் சந்திக்கும் பிரச்சினை யதார்த்தமானது. மரபியல் காரணங்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சித்த மருத்துவத்தாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
அப்படியாயின், ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவத்தால் என்னென்ன சிகிச்சைகளை கொடுக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவம்
1. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மூச்சுத் திணறலைக் குறைக்க நெபுலைசரும் இன்ஹேலர் பயன்படுத்துவார்கள். இது இரைப்பையில் வீச்சு அதிகரிக்காமல் தடுக்கிறது.
“திரிகடுகம்” எனும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியும், தசமூலம் எனும் ஓரிலை, மூவிலை, சிறுவழுதுணை, கண்டங்கத்தரி, சிறு நெருஞ்சில், குமிழ், முன்னை, பாதிரி, பையாணி, வில்வம் ஆகிய மூலிகைகளும் சித்த ஆயுர்வேத மருந்துகளின் பெரும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
2. ஆஸ்துமா நோயுள்ளவர்கள் காபித் தூள் அல்லது தேநீர்த் தூள் இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் அதனுடன் ஆடாதொடை இலை சேர்த்து கசாயம் பொடி செய்துக் கொள்ளலாம். இந்த பொடி 2 ஸ்பூன் பொடிக்கு 2 குவளை நீர் விட்டு அரை குவளை கஷாயமாக வற்றவைத்து, வடிகட்டி இனஞ்சூட்டோடு குடிக்கலாம். மழைக்காலங்களில் இரைப்பின் அட்டகாசம் சட்டெனக் குறையும்.
3. இதய, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரைப்பு பாதிப்பு வரும். அதே சமயம், புகைப் பழக்கத்தால் வரும் COPD நோய், ஆஸ்துமா போன்று 40 வயதிற்கு மேற்பட்டவரை வதைக்கும். இவர்கள் சிகிச்சையுடன் சேர்த்து ஆயுள் வேதப்படி சிகிச்சை கொடுக்கலாம்.
4. இந்தியாவில் கவனிக்கப்படாத இளங்காசம் PRIMARY எனும் COMPLEX TUBERCULOSIS நிறையவே உண்டு. “ஆஸ்துமா”என்ற சந்தேகம் எழுந்தாலே, அது எந்தவகை ஆஸ்துமா என்பதனை சிகிச்சையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
