டைப் 5 சர்க்கரை நோய் பற்றி தெரியுமா? மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்
புதிதாக டைப் 5 சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விரிவான விபரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
பொதுவாக மரபணு மூலம் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு பரவு நோயாக நீரிழிவு நோய் இருக்கின்றது. நீரிழிவு உள்ள பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு 50 சதவீதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
இவை டைப் 1, டைப் 2 என்று காணப்பட்ட நிலையில், தற்போது புதிதாக டைப் 5 நீரிழிவு நோய் இருப்பதும் உறுதியாகியுள்ளது. குழந்தைகளை பாதிக்கும் என்றும் பதின்வயது அல்லது 20 வயதுகளில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களை டைப் 5 நீரிழிவு நோய் பாதிக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்தியாவில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது டைப் 5 நீரிழிவு நோய் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதாக கூறப்படுகின்றது.
டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய சர்க்கரை நோயில் இருந்து வேறுபட்டதுடன், ஒல்லியான மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடைய இளம் வயதினரை பாதிக்கும்.
தடுக்க வழிகள்
கர்ப்பகாலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதுடன், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தொடர்ந்து அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து சர்க்கரை நோயை தடுக்கலாம்.
பதின்பருவ குழந்தைகளுக்கு உணவில் அதிகளவு புரதமும், குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். வைட்டமின் சத்துகளை எடுத்து கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |