தலையில் பல்லி விழுந்தால் ஆபத்து- பல்லி பஞ்சாங்கம் சொல்வது என்ன?
வீட்டில் நல்ல காரியம் பேசும் போது பல்லி சத்தம் கேட்டால் அந்த சகுனம் நல்லது என பெரியவர்கள் கூறுவார்கள். அதே பல்லி தலையில் விழுந்தால் அன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டும் என்பார்கள்.
முழு பல்லி உடம்பில் விழுந்தால், அதற்கு வேறு சாஸ்த்திரம் உள்ளது. அதுவே பல்லியின் உடலில் உள்ள பாகங்கள் விழுந்தால் அதற்கு தனி அர்த்தங்கள் உள்ளன.
வீட்டில் சுற்றத்திரியும் பல்லி, ஆண்- பெண் மீது விழுவதன் வேறுபாட்டை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் திரைப்படமொன்றும் வெளியானது.
அந்த வகையில், உடலில் எந்த பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பல்லி பஞ்சாங்கம்
- ஒரு பெண்ணின் தலை மீது பல்லி விழுந்தால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என சாஸ்த்திரம் கூறுகிறது.
- இடது கண் மீது விழுந்தால் பெண் ஆசைப்படும் ஆண் காதலிப்பதாக அர்த்தம்.
- வலது கண்ணில் பல்லி விழுந்தால் மன அழுத்தம் எதிர்க் கொள்ளப்போவதாக அர்த்தம்.
- வலது கன்னத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.
- வலது காது மீது விழுந்தால் பொருளாதார ரீதியாக லாபம் வர வாய்ப்புள்ளது.
- மேல் உதட்டில் விழுந்தால் சில சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.
- கீழ் உதட்டில் விழுந்தால் புதிய பொருட்கள் வாங்கலாம்.
- இரண்டு உதட்டிலும் சேர்ந்தபடி விழுந்தால் உடனடியாக புது பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.
- முதுகுப்பகுதியில் விழுந்தால் உயிரிழப்பு செய்தி கேட்க வாய்ப்புண்டு.
- நகத்தின் மீது விழுந்தால் கண்டிப்பாக சச்சரவு வரும்.
- கைகள் மீது விழுந்தால் பொருளாதார பலன்கள் கிடைக்கும்.
- இடது கையின் மீது பல்லி விழுந்தால் மன அழுத்தம் ஏற்படும்.
- விரல்களில் விழுந்தால் புதிதாக நகை வாங்க வாய்ப்புண்டு.
- வலது கையில் பல்லி விழுந்தால் காதல் உறவில் இன்பம் ஏற்படும்.
- தோள்பட்டையில் மீது விழுந்தால் நகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- தொடைப்பகுதியில் விழுந்தால் மகிழ்ச்சியான விஷயம் நடக்க போவதாக அர்த்தம்.
- கால் மூட்டி பகுதியில் பல்லி விழுந்தால் உங்கள் மீது யாராவது பிரியம் காட்ட வாய்ப்பு உள்ளது.
- கணுக்காலில் விழுந்தால் வீண் வம்பு வீடு தேடி வரும்.
- கெண்டைக்காலில் விழுந்தால் விருந்தாளிகள் வீட்டிற்கு வருவார்கள்.
- வலது கால் மீது பல்லி விழுந்தால் தோல்வியை தழுவ வாய்ப்பு உள்ளது.
- கால்விரல்களில் விழுந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
