நம்மை நாமே கனவில் கண்டால் அதிர்ஷ்டமா? என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க
மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன. கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருதாக கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது.
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம்.
நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் நிறத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது. கனவில் நிகழ்வதற்கான பலன் மாத்திரமே நிஜத்தில் நடக்கும். இந்த விடயத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் உங்களை நீங்களே கனவில் கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன பலன்?
உங்கள் கனவில் நீங்கள் மகிழ்ச்சியாகவோ அல்லது சிரிப்பதையோ கண்டால், எதிர்காலத்தில் நீங்கள் சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள் என்று அர்த்தம்.
மேலும், வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது இதன் பொருள். உங்கள் கனவில் நீங்கள் அழுவதைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. நீங்கள் அழுவதைப் பார்ப்பது ஒரு நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது.
நமமை நாமே கனவில் அழுவதைக் போல் கண்டால், வாழ்க்கையில் பெரிய வெற்றிகள் கிடைக்கப்போவதாக அர்த்தம்.
கனவில் நீங்கள் அழுவதைப் பார்த்தால் வாழ்க்கையில் உங்கள் கஷ்டங்கள் குறையும் என்று அர்த்தம்.விரைவில் ஒரு நல்ல செய்திகள் உங்களை தேடிவரும்.
உங்கள் கனவில் நீங்கள் இறந்து விட்டதாக கண்டால், உங்களுக்கு நீண்ட ஆயுள் இருப்பதாக அர்த்தம்.
அதுமட்டுமின்றி, உங்கள் சடலத்தை மயானத்திலோ, சடலத்தை ஊர்வலத்திலோ பார்த்தால், நீங்கள் வெற்றி பெறப் போவதை பிரபஞ்சம் உணர்த்துவதாக அர்த்தப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |