கர்மாவை மாற்றியமைக்கும் வித்தை! விளக்கம் கொடுக்கும் சத்குரு
பொதுவாக, மக்களிடம் ‘கர்மா’ என்ற சொல்லிற்கு வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் பலவிதமான விளக்கங்கள் காணப்படுகின்றன. சிலர், அவர்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் செய்த செயல்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக கர்மாவை பார்க்கிறார்கள்.
அதாவது நாம் செய்யும் செயல்களுக்கான பலன்கள் நிச்சயம் நம்மை வந்து சேரும் என்பதே இதன் அடிப்படை எண்ணக்கரு.

ஆனால் கர்மா குறித்து மத ரீதியாக ஒரு விமான கருத்து காணப்படுகின்றது. அதே வேலை அறிவியல் ரீதியான இன்னொரு கருத்து காணப்படுகின்றது.
இது குறித்து ஒவ்வொரு தனிப்பட மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான புரிதல் இருக்கலாம். கர்மா என்றால் விதி அல்லது முன்ஜென்மம் என்று பலநேரங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

ஒருவர் காயப்பட்டாலோ அல்லது பணத்தை இழந்துவிட்டாலோ, இது அவரது கர்மா என்று சொல்லுவதை கேட்டிருப்போம். சிலர் நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை கரும பலன் அதாவது கர்மா என கருதுகின்றனர்.அதை நினைத்து பயப்பட வேண்டும் என்றும் சிலர் நினைக்கின்றார்கள்.
கர்மா என்றால் என்ன?
கர்மா என்பது மனதின் தூண்டுதலைக் குறிக்கிறது. நம்முடைய முந்தைய நடத்தை முறைகளின் அடிப்படையில் பேச, செயல்பட, சிந்திக்கத் தூண்டுகிறது. நம்முடைய பழக்கங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தில் பாதை அமைக்கிறது, சரியான சூழலில் அவை தூண்டப்படும் போது, அதனையே நாம் மீண்டும் செய்யக் காரணமாகிவிடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் நாம் எதை செய்ய நினைகின்றோமோ அதை தான் செய்கின்றோம். அதன் அடிப்படையில் பார்த்தால், செயலுக்கு அடிப்படையாக இருப்பது சிந்தனை அதாவது நமது எண்ணங்கள் தானே. அதை சரியாக மாற்றியக்க நம்மால் முடிந்தால், நமது கர்மாவை நாமே முடிவு செய்ய முடியும் இல்லையா?
கர்மா தொடர்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தை நிறுனர் சத்குரு என்கிற ஜக்கி வாசுதேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் புகழ்பெற்ற யோகியாக திகழ்ந்துவரும் இவரின் கருத்துக்களுக்கு மக்கள் மற்றும் திரைபிரபலங்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |