உங்கள் கனவில் பேய்கள் தோன்றுகிறதா? அப்போ இந்த விடயங்களில் ஜாக்கிரதை!
பொதுவாகவே தூக்கத்தின் போது கனவுகள் வருவது இயல்பான விடயம் தான். கனவில் வரும் விடயங்கள் அனைத்தும் நிஜத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது.
ஆனால் அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என கனவு சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. கனவுகள் எதிர்காரத்தில் நடக்கவிருக்கும் விடயங்களை மறைமுகமாக பிரதிபளிக்கும் கண்ணாடி போன்றது.
அதன் அடிப்படையில் நமது கனவில் தோன்றும் ஒவ்வொரு விடயத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் பேய்கள் பற்றிய கனவின் அர்த்தங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
chanakya niti: இந்த விடயங்கள் சரியாக இருந்தால் திருமண வாழ்வில் பிரிவே இருக்காது... என்னென்ன தெரியுமா?
பேய்கள் பற்றிய கனவுகளின் அர்த்தம்
கனவு அறிவியலின் அடிப்படையில் தீய ஆவிகள், பேய்கள் போன்ற அமானுஷ்ய உருவங்கள் கனவில் தோன்றுவது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பிரச்சினைகளின் முன்கூட்டிய எச்சரிக்கை மணி போன்றது.
போய்கள் பற்றிய கனவுகள் அடிக்கடி தோன்றுகின்றது என்றால், எதிர்காலம் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தெரிந்தவர், உறவினர், நண்பர் போன்றவர்களின் இறந்த பின்னர் இவர்களின் ஆன்மாக்கள் போல் கனவில் தோன்னிறினால் உங்களுக்கு யாரோ கெடுதல் செய்கின்றார்கள் என்று அர்த்தம். அதை உணர்த்துவதாகவே இந்த கனவு அமைகின்றது.
கனவில் ஒரு ஆவி அல்லது பேயுடன் பேநுவது போல் கனவு காண்டாலும் அது ஆபத்தான அறிகுறியாகவே கனவு சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
கனவில் இறந்த ஜோடி அல்லது ஒரு ஆணின் அல்லது பெண்ணின் ஆன்மாவை கண்டால், அது மங்களகரமான அறிகுறியாக கருதப்படுகின்றது. உங்களுக்கு பாதுகாப்பாக உங்கள் முன்னோர்கள் இருப்பதையும் இது உணர்த்துகின்றது.
கனவில் தற்கொலையைப் பார்ப்பது ஒரு மோசமான அறிகுறியாகவே கனவு சாஸ்திரம் குறிப்பிடுகிகன்றது. அதனால் உங்கள் தொழில் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்டுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |