chanakya niti: இந்த விடயங்கள் சரியாக இருந்தால் திருமண வாழ்வில் பிரிவே இருக்காது... என்னென்ன தெரியுமா?
உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியே தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் போர் இருக்கின்றனர்.
வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது. அந்த வகையில் சாணக்கிய நீதியின் அடிப்படையில் திருமண வாழ்க்கை வெற்றியடைய கணவன் மனைவி இருவருக்கு மத்தியிலும் அவசியம் இருக்க வேண்டிய விடயங்கள் குணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
கணவன் மணைவி பின்பற்ற வேண்டியவை
சாணக்கிய நீதியன் அடிப்பமையில் கணவன் மனைவிக்கு இடையில் சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலேயே அதிகமான பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
திருமண வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்த வசீகரம் மற்றும் ஆர்வம் இறுதிவரையில் இருக்க வேண்டும் என்றால் கணவன் தனைவிக்கு இடையில் சிறந்த புரிதல் இருக்க வேண்டும். இந்த விடயம் இருக்கும் தம்பதியினரை யாராலும் பிரிக்கவே முடியாது என்கின்றார் சாணக்கியர்.
எந்தளவுக்கு புரிதல் இருக்கின்றதோ, அவ்வளவுக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும்.
சாணக்கியரின் கூற்றுக்கு இணங்க திருமண வாழ்வை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு நிதி இன்றியடையாதது. கணவன் மனைவிக்கு இடையில் சிறந்த நிதி முகாமைத்துவ பண்புகள் இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
நிதிநிலையில் ஏற்படும் சவால்மிக்க தன்மையே திருண உறவில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முதல் காரணமாக அமைகின்றது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் கணவன் மனைவிக்கு இடையில் சமத்துவம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். யார் பெரிது என்ற எண்ணம் வந்துவிட்டால் குடும்ப வாழ்க்கை முற்றிலும் அழிந்துவிடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, உணர்வுகளை பரிமாறிக்கொண்டு நண்பர்கள் போல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதிகளுக்கு இடையில் பிரிவு ஏற்படுவது அசாத்தியம்.
எல்லாவற்றுக்கும் மேலாக கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை இன்றியமையாதது. மனிதர்களாக பிறந்த அனைவருமே சுயமரியாதையை எதிர்பார்ப்பார்கள். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம்.
அதுமட்டுமன்றி இருவருக்கும் இடையில் நம்பிக்கை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். திருமண வாழ்க்கையின் அடிப்படையே நம்பிக்கை தான். இந்த விடயங்கள் ஒரு திருமண வாழ்வில் சரியாக இருந்தால் வாழ்க்கை முழுவதும் இப்படியான திருமண உறவில் பிரிவு நேராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |