அடிக்கடி கனவில் விலங்குகள் வருகினறதா? அர்த்தத்தினை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நாம் தூங்கும் போது கனவில் சில விலங்குகள் என்னென்ன பலன்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அவ்வாறு இரவில் அயர்ந்து தூங்கும் போது சில கனவுகள் ஏற்படும்.
தூங்கும் போது உடல் உறுப்புக்கள் ஓய்வு எடுக்கும் நிலையில், இதயம் தனது வேலையை செய்து வரும். அதே போன்று மூளையும் இரவில் தூங்கும் போது கூட நமது சிந்தனையை கனவாக பிரதிபலிக்கும்.
அந்த வகையில் கனவு ஏற்படும் போது ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தத்தை பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம். தற்போது விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?
கனவில் ஆடு வந்தால் தெய்வத்தின் அருள் பூரணமாக கிடைப்பது மட்டுமின்றி தனவிருத்தியும் கிடைக்கும் என்று அர்த்தம்.
ஆமை கனவில் வந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தினைக் காணலாம்.
எருது மிதிப்பது அல்லது மாடு விவசாய நிலத்தில் நடப்பது போன்று கனவு வந்தால், குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.
அதுவே பசு மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போன்று கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவதாக அர்த்தம்.

பசு குட்டிப்போடுவது போன்று கனவு வந்தால், மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாகவும், சுப நிகழ்ச்சிகள் நடக்கப்போவதாகவும் அர்த்தம்.
கனவில் குதிரையோ அல்லது குதிரை மீது சவாரி செய்வது போன்று வந்தால், வாழ்க்கையில் முன்னேற்றம்
குதிரை கனவில் வந்தாலோ அல்லது நாம் குதிரை மீது சவாரி செய்வது போல கனவு வந்தாலோ, வாழ்க்கையில் முன்னேற்றம் வரப்போவதாக அர்த்தம்.

நாய் கனவில் வந்தால் தொழில் விருத்தியடைவதுடன், உத்தியோகத்தில் உயர்வும் கிடைக்கும்.
கீரிப்பிள்ளை கனவில் வந்தால் எதிர்பாராத உதவிகள் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும். அதுவே கீரிப்பிள்ளை பாம்பை கொல்வது போன்று கனவு வந்தால், உறவினரிடையே இருந்த பகை விலகும்.
மயில் மற்றும் வானம்பாடி போன்ற பறவைகள் கனவில் வந்தால் தம்பதிகளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஓநாய் ஊளையிடுவது துக்க செய்திகள் வருவதாக அர்த்தம். அதே போன்று குரங்குகள் கனவில் வந்தால் விரோதிகளால் துன்பம் ஏற்படுமாம்.
ஒட்டகம் கனவில் வந்தால் பல்வேறு பிரச்சனைகள் வரும் என அர்த்தம். அதுவே தேள் கனவில் வந்தால் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அர்த்தம்.
யானை கனவில் வந்தால், மிகப்பெரிய செல்வம் நமக்கு கிடைக்கப்போவதாகவும், அதுவே நமக்கு மாலையிடுவது போன்று கனவு கண்டால் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும். அதுவே யானை மீது ஊர்வலம் வருவது போன்று கனவு வந்தால், எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
சுண்டெலியைக் கனவில் கண்டால் வாழ்வின் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். இதே போன்று பூனையைக் கண்டால் உடல்நல பாதிப்பு ஏற்படுமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |