Dog Facts: நாய்களுக்கு இந்த நிறங்களை பிடிக்காதா? அப்போ தெரு நாய்கள் மத்தியில் ஜாக்கிரதை
பொதுவாகவே உலகளவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு செல்லப் பிராணியாக நாய் காணப்படுகின்றது. உலகில் விசுவாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் இது நிச்சயம் நாயாக மட்டும் தான் இருக்க முடியும்.
நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சையமான பிராணியாக இருந்தாலும் நாயிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும் நாயின் உடல் அமைப்பில் காணப்படும் சில விசேட அம்சங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அந்த வகையில் நாய்கள் செய்யும் சில செய்களுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் நாய்களின் உளவியல் உண்மைகள் குறித்தும் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
நாய்கள் பற்றிய உண்மைகள்
பொதுவாக வளர்ப்பு நாய்கள் தனது உரிமையாளரிடம் மிகவும் பாசமாகவும் பணிவாகவும் நடந்துக்கொள்வதை அனைவருமே பார்த்திருக்க கூடும்.
வீட்டில் வளர்க்கப்டும் நாய்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சரியாக நேரத்திற்கு ஊசிகள் போடப்படுவதனால் அவை தற்சமயம் மற்றவர்களை கடித்தாலும் பெரிய அளவில் ஆபத்து ஏற்படாது.
ஆனால் வீதிகளில் உலாவும் தெரு நாய்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.காரணம் அவை முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது.
இதனால் தெரு நாய்களுக்கு திடீர் என வெறிப்பிடிக்க கூடிய வாய்ப்புக்கள் வீதிகளில் நடமாடுபவர்களை எதிர்பாராத வகையில் துரத்தக்கூடிய அபாயமும் அதிகமாக காணப்படுகின்றது.
சில சமயங்களில் தெரு நாய்கள் கடித்து பலர் காயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதற்கு காரணம் நாய்கள் பற்றிய சில விடயங்கள் தொடர்பில் மனிதர்களக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமையே ஆகும்.
நாய்களுக்கு பழக்கமில்லாத மனிதர்கள் மற்றும் ஏனைய விலங்குகளையோ கண்டால் இயல்பாகவே கோபம் வரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
மேலும் நாய்களுக்கு குறிப்பிட்ட சில நிறங்களை அருகில் பார்ப்பது கோபத்தை ஏற்படுத்தும் என விலங்கியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்த வகையில் ஒரு ஆய்வு அறிக்கையின் பிரகாரம் நாய்கள் சிவப்பு நிறத்ததை பார்க்கும் போது உளவியல் தாக்கத்துக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சிவப்பு நிறம் நாய்களின் கோபத்தை துண்டுகின்றது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்ட்டள்ளது.
மேலும், கோபமான நாய்கள் நம்மை துரத்த ஆரம்பித்தால் உடனடியாக செய்ய வேண்டிய சில விடயங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.இது நம்மை காப்பாற்றிக்கொள்ள பெரிதும் துணைப்புரியும்.
நாய்களுக்கு பாதுவாக சிவப்பு நிறம் பிடிக்காதது போது குறிப்பிட் சில நாய்களுக்கு கருப்பு நிறத்தில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஆடைகளை பிடிக்காதாம். இதனால் தான் சில நாய்கள் தன் நிழலை பார்த்ததே கூட குறைக்க ஆரம்பித்துவிடுகின்றது.
நாய்கள் உங்களை துரத்த முற்படும் போது ஒருபோதும் பயந்து ஓட ஆரம்பித்துவிட கூடாது. நாய்கள் மனிதர்களை விட புத்திசாலியான விலங்கு இது நமது உடலில் இருந்து வரும் வாசனை மற்றும் வியர்வையை வைத்தே நமது மனநிலையை உணர்ந்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது எனவே நீங்கள் பயப்படுகின்றீர்கள் என்பதை நாய்கள் உணர்ந்தால் நிச்சயம் துரத்த ஆரம்பித்துவிடும்.
அதனால் பயந்து ஓட முயல்பவர்களை நாய்கள் துரத்துகிறது. ஆகையால் நாய்கள் துரத்தும்போது, எந்த சமயத்திலும் நீங்கள் ஓட நினைக்காதீர்கள்.இது ஆபத்தை ஏற்படுத்தும்.
மேலும் நாய்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வண்ணங்களில் ஆடை அணிந்திருக்கின்றீர்ககள் என்றால் தெரு நாய்கள் அதிகம் இருக்கும் இடங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |