கணவனுடன் மகிழ்ச்சியாக வாழாத மனைவியிடம் இந்த அறிகுறிகள் வெளிப்படும்... சாணக்கிய நீதி!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
சாணக்கியரின் கொள்கைகைளையும் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது தான் சாணக்கிய நீதி நூல்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். தற்காலத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் உயர்ந்துக்கொண்டே தான் செல்கின்றது.
சாணக்கிய நீதியில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் திருமண வாழ்க்ககையில் கணவனிடம் உடல் மற்றும் உள ரீதியாக முழுமையாக திருப்தியடையாத மனைவியிடம் வெளிப்படும் சில குணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பேச்சை குறைத்துக் கொள்வது
சாணக்கியரின் கருத்தப்படி கணவனின் சின்ன சின்ன செயல்கள் குறித்தும் அறிந்து வைத்திருப்பது தான் பெண்களிளன் குணம் ஆனால் கணவனின் மீது அதிருப்தியில் இருக்கும் பெண்கள் கணவனின் செயல்களை பொருட்படுத்த மாட்டார்கள்.
குறிப்பாக பெண்கள் அதிகம் பேசுவதால் ஆறுதல் அடையும் குணம் கொண்டவர்கள். இருப்பினும் அவரை்கள் தங்களின் வாழ்க்கை துணையிடம் பேசுவதை குறைத்துக்கொள்வது அல்லது பேச்சை தவிர்த்துவிடுவது அவர்கள் கணவனிடம் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
அனைத்திற்கும் கோபப்படுவது
சாணக்கியரின் கருத்துப்படி ஒரு நல்ல மனைவி தன் கணவனை எப்போதும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் எனவே நினைப்பாள்.
அப்படிப்பட்ட பெண் எதற்கெடுத்தாலும் போபமடைகின்றால் என்றால், தன் கணவன் அவளை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்றும் அவள் திருப்தியற்ற வாழ்வை வாழ்கின்றாள் என்றும் தான் அர்த்தம் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
தங்களை மட்டுமே கவனித்துக் கொள்வது
பொதுவாக பெண்களுக்கு தங்களை விடவும் மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் செலுத்தும் குணம் இயற்கையாகவே இருக்கின்றது.
எனவே தான் பெண்கள் தங்களை வருத்திக்கொண்டு குழந்தையை பெற்றெடுக்கின்றார்கள். தங்களை உதிரத்தை உருக்கி குழந்தைக்கு உணவளிக்கின்றார்கள்.
மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும் உன்னத குணத்தை இயல்பாகவே கொண்டுள்ள பெண் கணவனை பெருட்படுத்தாது தங்களை மட்டுமே கவனித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றாள் என்றால், அவள் கணவனிடத்தில் வைத்த அன்புக்கு கணவன் தகுதியற்றவன் என உணர்கின்றாள் என்று அர்த்தம்.
இந்த குணங்கள் பெண்களிடம் வெளிப்பட ஆரம்பித்தால், அவள் கணவனிடம் மகிழ்ச்சியாக இல்லை என சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |