மறந்தும் இந்த 6 உணவுகளை குக்கரில் சமைக்காதீங்க..எமனாக மாறும் உணவுகள்
பொதுவாக தற்போது அனைவரது வீடுகளிலும் சமைப்பதற்கு குக்கர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆரம்ப காலங்களில் சாதத்தை சீக்கிரம் சமைக்க வேண்டும் என்பதற்காககே குக்கர் அதிகமாக பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது எல்லா உணவுகளையும் சமைக்கத் தொடங்கிவிட்டனர்.
உணவை சீக்கிரம் சமைக்க உதவி செய்தாலும் எல்லா உணவுகளையும் குக்கரில் சமைக்க முடியாது.
ஏனெனில் சில உணவுப் பொருட்களை குக்கரில் வேக வைக்கும் போது, அந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்து விடும்.
அந்த வகையில், இந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் குக்கரில் என்னென்ன பொருட்களை மறந்தும் சமைக்ககூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகள்
1. பால் போட்டு சமைக்கும் உணவுகளை குக்கரில் சமைக்கக் கூடாது. இதனால் சுவையில் மாற்றம் ஏற்படுவதுடன் உணவு திரிந்து போனது போன்று இருக்கும். உதாரணமாக, க்ரீம், சீஸ், குளிர்ச்சியான பால் பொருட்களை குக்கரில் போட்டு சமைக்கக் கூடாது எனக் கூறப்படுகின்றது.
2. பாஸ்தா போன்ற உணவுகளை குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் பாஸ்தா போன்ற உணவுகள் அளவுக்கு அதிகமான கொதிநீரில் வேக வைக்கும் பொழுது அது குலைந்து விடும். இதனால் அதன் சுவையிலும் மாற்றம் ஏற்படும்.முடிந்தவரை நீரில் தனியே வேக வைத்து, பின் அதை மசாலாவுடன் சேர்த்து கலந்து இறக்கவும்.
3. உறைய வைக்கப்பட்ட உணவுகளை சூடேற்றுவதற்கு குக்கர் பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும். ஏனெனின் ஏற்கனவே வேக வைத்த உணவுகளை மீண்டும் குக்கரில் வேக வைக்கும் போது, உணவின் சில பகுதிகள் அதிகமாக வெந்தோ, பிற பகுதிகள் சரியாக வேகாமலோ போகலாம்.
4. குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகளில் கீரை, கோஸ், ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறி வகைகளும் உள்ளடங்குகின்றன. பச்சை காய்கறிகள் அதிகமாக வெந்து விட்டால் அதனை சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |