கண் திருஷ்டி காணாமல் போக பரிகாரம்- இதை செய்தால் போதும்
பொதுவாக கண் திருஷ்டி பிரச்சினை பலருக்கும் இருக்கும்.
இதனால் வறுமை, நோய் பாதிப்பு, சிறு சிறு பிரச்சனைகள் அடிக்கடி தலை தூக்குவது, தடைகள், கைப்பொருள் இழப்பு, சண்டை சச்சரவு உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாத்.
இது போன்ற திருஷ்டி கழிப்பதற்காகவே விசேஷங்கள் மற்றும் திருமணங்கள் வைபோகங்களின் போது ஆரத்தி எடுத்து திலகம் இடுகிறார்கள். இப்படி செய்வதால் கண் திருஷ்டிகள் கழிந்து விடும் என நம்பப்படுகின்றது.
மேலும், விசேஷங்களின் போது குலை தள்ளிய பூவுடன் இருக்கும் வாழை மரங்கள் வாசலில் வைக்கப்படுகின்றன. இவை திருஷ்டி தோஷங்களை போக்கும் குணம் கொண்டவை.
இது போன்று கண் திருஷ்டிகளை போக்க வேறு என்னென்ன பரிகாரங்கள் செய்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கண் திருஷ்டிகளை போக்க பரிகாரங்கள்
1. வியாபாரத் தலங்களில் கண் திருஷ்டி அதிகமாகவே இருக்கும். இப்படியான நேரங்களில் எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் குங்குமம், மஞ்சள் தடவி வைக்கலாம்.
2. ஆகாச கருடன் என்ற ஒரு வகைக் கிழங்கை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். இது வீட்டிற்கு வரும் திருஷ்டிகளை கழிக்கும். அநேகமான வீடுகளில் இதனை பார்க்கக் கூடியதாகவும் இருக்கும்.
3. திருஷ்டிகள் அதிகமாகும் பொழுது உடல் அசதி, உடற்பிணி, சோம்பல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரும். இப்படியான நேரங்களில் கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து வாரம் ஒரு முறை குளித்து வர வேண்டும்.
4. வீட்டை சுத்தம் செய்யும் போது சிறிதளவு கல் உப்பை நீரில் கலந்து, தரையை துடைத்து வந்தால் வீட்டிற்குள் இருக்கும் கண் திருஷ்டிகள் நீங்கும்.
5. தோஷங்களை நீக்க பல பரிகாரங்கள் இருக்கின்றன. அதில், கருப்பு ஜீவராசிகளை ஆடு, கோழி போன்றவற்றை சில நாட்கள் வளர்த்து அவற்றை கோயிலுக்கு கொடுப்பது ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |