விஷமற்ற பாம்புகள் கடித்தாலும் உயிர் போகுமாம்! ஜாக்கிரதை
பொதுவாக பாம்புகள் என்றாலே அதிக விஷத்தன்மை கொண்டதாகவே இருக்கும். இதனால் தான் பலரும் அதன் பக்கத்தில் செல்வதற்கே பயந்து நடுங்குகின்றனர்.
சரி விஷமற்ற பாம்புகள் என்று நாம் அசால்டாக கையாள்வது எவ்வாறு பெரிய தவறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
விஷமற்ற பாம்புகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மூச்சை மிகவும் அசால்ட்டாக முடித்துவிடுகின்றது.
விஷமற்ற பாம்புகளால் ஆபத்து
மலைப்பாம்பு
ராட்சத உடல் அமைப்பைக் கொண்டுள்ள பாம்புகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளை முறித்து கொன்றுவிடும் என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் ராட்சத உடல் அமைப்பைக் கொண்ட பாம்பானது தனது இரையை பிடித்துக்கொண்டு உடம்பை சுற்றிக் கொள்ளும்.
தான் சுற்றிக் கொண்டிருக்கும் இரை ஒவ்வொரு முறையும் மூச்சை வெளியே விடும்பொழுது, குறித்த பாம்பின் பிடி இன்னும் இறுக்கமாகவே இருக்கும்.
ஒரு கட்டத்தில் இரையாக சிக்கியிருக்கும் விலங்குகளோ, மனிதர்களோ மூச்சு உள்ளே இழுக்க முடியாத அளவிற்கு தனது பிடியை இறுக்கமாக்கிவிடுவதால் சில நிமிடங்களில் உயிரும் பிரிந்துவிடுகின்றது. உடலில் ரத்த ஓட்டத்தை நிறுத்துவதுடன், மூளையையும் செயலிழக்க வைத்துவிடும்.
வீடுகளில் வளர்க்கப்படும் பாம்புகள் எளிதாக குழந்தைகள் பெரியவர்களின் உயிரை எடுத்துவிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
விஷமற்ற பாம்பின் கடி
விஷமற்ற பாம்பு கடித்தால் விஷம் ஏறாது... எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று நினைக்கின்றோம்.
விஷமற்ற பாம்புகளுக்கும் பற்கள் உள்ளது. இந்த பற்களாவது இரையை பிடிப்பதற்கு ஏற்ப கொக்கிகள் போன்று வளைந்து உள்நோக்கி இருக்குமாம்.
சில தருணங்களில் கடித்து சதையை கிழித்துவிடும். இத்தருணத்தில் தையல் போடும் சூழ்நிலையும் எழும்.
ஆனால் இதனையும் தாண்டி என்னவொரு ஆபத்து என்றால், பாம்புகளின் வாயில் நூற்றுக்கணக்கான மோசமான பாக்டீரியாக்கள் காணப்படும். இவை ரத்தத்தில் கலந்து உயிரிழப்பினையும் ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |