அதிக சத்துக்கள் கொண்ட பாசா மீன்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
பாசா மீன் சாப்பிடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பாசா மீன்
பொதுவாக மீன் என்றால் பெரும்பாலான நபர்களுக்கு கடல்மீன் தான் ஞாபகம் வரும். ஆனால் குளம் மற்றும் கம்மா வகைகளில் கிடைக்கும் மீன்களும் மிகவும் சுவையாகவே இருக்கும்.
அந்த வகையில் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத குளம் மற்றும் கம்மா மீன் தான் பாசா. இவை அட்டகாசமான சுவையுடன் காணப்படுவதுடன், அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த ஒன்றாகும்.
பொதுவாகவே மீனில் ஒமேகா 3, உயர்தர புரதம் என அதிக சத்துக்கள் நிறைந்திருக்கும். அந்த வகையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பாசா மீன் குறித்து தெரிந்து கொள்வோம்.

என்ன பலன்?
பாசா மீனின் தோல் வழுவழுப்பாக காணப்படுவதுடன், உடற்பயிற்சி செய்பவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு நல்ல பலனை அளிக்கின்றது.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இந்த மீனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளையில் செயல்பாட்டை அதிகரிக்குமாம்.
இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
இந்த பாசா மீனில் அதிக ஆரோக்கியம் இருந்தாலும் இது சிலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே இதை இதய நோய் சிறுநீரக நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு சாப்பிட்டால் நல்லது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |