தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தெரியுமா?
வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழத்தில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றது. உடலுக்கு உடனடியான ஆற்றலை அளிக்கின்றது.
இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற வைட்டமின்களும் அதிகமாக தாதுக்களும் அடங்கியிருக்கின்றது.

தினமும் ஒரு வாழைப்பழம் நாம் எடுத்துக்கொண்டால் உடம்பில் பல மாற்றங்களை அவதானிக்கலாம்.
நன்மைகள் என்ன?
வாழைப்பழத்தில் இருக்கும் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உடம்பிற்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது. ஆதலால் தான் விளையாட்டு வீரர்கள் அனைவரும் விளையாட்டை ஆரம்பிக்கும் முன்பு மற்றும் இடைவெளியில் வாழைப்பழத்தினை சாப்பிடுகின்றனர்.
இதிலுள்ள நார்ச்சத்து இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதுடன், இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. மேலும் இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த அளவை உயர்த்தவும் செய்கின்றது.

கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன், முகத்த்திற்கு ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல ஊட்டச்சத்து அளிப்பதுடன், குமட்டல் வாந்தி பிரச்சனையும் தடுக்கின்றது.
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தினை சாப்பிடலாம். இவை ரத்த சர்க்கரை அளவு, உடல் எடை குறைவு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |