கொரோனா திரிபு: Delmicron அறிகுறிகள் என்ன? யாரை அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கு?
டெல்மைக்ரான் (Delmicron)என்பது கொரோனா வைரஸின் திரிபு எனவும் கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை அதிவேகமாக டெல்மைக்ரான் தொற்று பாதித்து வருகிறது.
டெல்டா மற்றும் ஓமைக்ரான் ஆகிய இரண்டு வைரஸ்களின் அறிகுறிகளையும் ஒருங்கே கொண்டது தான் டெல்மைக்ரான் வைரஸ். இந்த திரிபு ஒரு சில நாடுகளில் வேகமெடுத்து உள்ளதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தற்போது இந்த வைரஸின் அறிகுறி என்ன? யாரை அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கு என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பொதுவான அறிகுறி
காய்ச்சல், சோர்வு, இருமல், வாசனை இழப்பு, சுவை உணர்வு இழப்பு.
டெல்மைக்ரானினால் பாதிக்கப்பட்டவரின் அறிகுறி
தொண்டை அரிப்பு, தும்மல், லேசான உடல் வெப்பநிலை, தீவிர உடல்வலி, சளி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
அதிக அளவில் பரவுமா?
சில சுகாதார வல்லுநர்கள் இந்த டெல்மைக்ரான் திரிபு அவ்வளவாக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கின்றனர்.
தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும், இதுவரை நாட்டில் டெல்மைக்ரான் குறித்த எந்த ஒரு பாதிப்புகளும் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
யாருக்கு ஏற்படும் அபாயம் அதிகம்?
வயதானவர்களுக்கு ஏற்கனவே சில உடல்நல குறைபாடுகள் இருப்பதன் காரணமாக இந்நோயினால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த டெல்மைக்ரான் குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்கள், முதியோர், இணை நோய் உள்ளவர்கள், தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் போன்றவர்களை எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
முகக் கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சுகாதாரமான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல் போன்றவையே ஆகும்.
அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.