வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை! அது கெட்டகாலம் ஆரம்பிப்பதன் அறிகுறியாம்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களின் வாழ்க்கை செல்வ செழிப்பு நிறைந்ததாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமாவது கிடையாது.
வாழ்வில் ஒரு பகுதி மகிழ்ச்சியானதாக இருந்தால், இன்னொரு பகுதி துன்பம் நிறைந்ததாக இருக்கும் என்பது இயற்கையின் நியதி.
வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் இருப்பவர்களும் இல்லை அது போல் மகிழ்ச்சியில் இருப்பவர்களும் இல்லை.
இந்து மத சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம், வீட்டில் தொடர்ச்சியாக நிகழும் ஒரு சில அறிகுறிகள் நமது வாழ்வில் கெட்ட காலம் ஆரம்பிக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் என்று நம்பப்படுகின்றது. அவ்வாறான அறிகுறிகள் பற்றிய இந்த பதிவில் பார்க்கலாம்.
வாடும் துளசி செடி
துளசி செடிக்கு இயற்யைாகவே நேர்மறை ஆற்றல்களை ஈர்கும் சக்தி இருப்பதாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இது லட்சுமி தேவியின் மறு உருவமாக பார்க்கப்படுகின்றது.அதன் காரணமாகவே இந்துக்கள் அதனை வணங்குகின்றார்கள்.
வீட்டில் இருக்கும் துளசி செடி உங்க கெட்ட காலத்தை முன்கூட்டியே உணர்த்தும் தன்மையை கொண்டுள்ளது.
துளசி செடி வீடுகளில் வாடினால் பாரிய பொருளாதார சிக்கலை சந்திக்க நேரிடும்.இது உங்களுக்கு ஏற்படப்போதும் துரதிஷ்டத்தை முன்கூட்டியே எச்சரிக்கின்றது.
தினசரி சண்டை
சாஸ்திரங்களின் பிரகாரம் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்துக்கொண்டே இருக்கின்றது என்றால், நிதி நிலை மோசமடையும் என்று குறிப்பிடப்படுகின்றது.
சண்டைகளும் கருத்து வேறுப்பாடுகளும் நிறைந்திருக்கும் இடத்தில் பணத்தின் கடவுளாக கருதப்படும் லட்சுமி தேவி தங்குவது கிடையாது.இது கெட்ட நேரம் ஆரம்பிப்பதன் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
பூஜை இல்லாத வீடு
வீடுகளில் தினமும் வீட்டில் பூஜை செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆனால் பூஜை அறை தூசி படிந்து அழுக்காக காணப்டுகின்றது என்றால் அது கெட்ட சகுணமாக கருதப்படுகின்றது. அதனால் எதிர்காலத்தில் மிகவும் மோசமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.
கண்ணாடி உடைதல்
வீட்டில் அடிக்கடி கண்ணாடி பொருட்கள் அல்லது முகம் பார்க்கும் கண்ணாடி உடைவது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் கெட்ட நிகழ்வுகளை முன்கூட்டியே உணர்த்துவதாக இருக்கும்.
இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் எதிர்காலம் குறித்தும் நிதி தொடர்பாகவும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
