இந்த நிறம் பிடித்தவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே நாம் விரும்பும் விடயங்கள், நம் பயன்படுத்தம் பொருட்கள் என்பன நமது குணத்தை ஒரளவுக்கு பிரதிபலிக்கும் என்றால் மிகையாகாது.
அந்தவகையில் உங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்தே உங்களில் ஆளுமை மற்றும் உங்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களை கணித்துவிட முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?

ஆம் நாம் விரும்பும் நிறம் மறைமுகமாக நமது ஆளுமையை வெளிப்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
உளவியல் ஆய்வுகளின் பிரகாரம் கருப்பு நிறத்தை விரும்புபவர்களின் ஆளுமை பண்புகள் மற்றும் விசேட குணங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு பிடித்த நிறம் கருப்பா?
கருப்பு நிறம் பெரும்பாலும் அதீத தன்னம்பிக்கையுடன் தொடர்புடையதாக அறியப்படுகின்றது எனவே கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் அதீத தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் ஒருபோதும் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்த்து மன அழுத்தம் அடைய மாட்டார்கள். இவர்களை பொருத்தமட்டில் இவர்கள் தனித்துவமானவர்கள் என்பதை இவர்களே உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் ஒரு வேலையை கொடுத்தால், அதை சீராக செய்து முடிக்கும் வரையில் ஓய மாட்டார்கள். இவர்களின் எந்தவொரு செயலிலும் நேர்த்தியும் முழுமைத்தன்மையும் நிச்சயம் இருக்கும். எதனையும் நேர்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் மனதளவில் வலிமையானவர்களாக இருப்பார்கள். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ்வதை விரும்பாதவர்களாக இருப்பார்கள்.

[UTXT2HG
இவர்களின் வாழ்வில் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களுக்கு மூடிமறைப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
ஆயிரம் கவலை இருந்தாலும் மற்றவர்களை எப்போதும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் காதல் விடயத்தில் மிகுந்த நேர்மையும் விசுவாசமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |