உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? ஜாக்கிரதை
Back Pain
Cholestrol
Kidney Disease
Diabetes
By Kishanthini
பொதுவாக நமது ரத்தத்தில் மிக அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் இருந்தால், ரத்த நாளங்களில் அது தட்டுக்களாக படியத் தொடங்கும்.
ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த தட்டுக்கள் உடைந்து கட்டியாக அடைப்பதுதான் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற பாதிப்புகள் ஆகும்.
அதுமட்டுமின்றி அதிக கொழுப்பு உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

image -medlineplus
- உடலின் பல பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் செல்வதற்கு இது இடையூறாக இருக்கும் அல்லது முழுமையான தடையை ஏற்படுத்தும்.
- அதிக கொலஸ்ட்ரால் இரத்த குழாய்களில் படிவது உங்களின் இதய தமனிகளை சுருக்கி, உங்களின் இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். அதுமட்டுமின்றி இரத்தம் உறைவு அபாயத்தையும் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
- நீரிழிவு நோய் மற்றும் ஹைப்போ தைராய்டிசம், அதிக உடல் எடை, சிறுநீரக நோய் போன்ற உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
- அதிக கொழுப்புக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி ஏற்படக்கூடும். இது ஒரு தீவிர ஆபத்து நிலை. இது உங்கள் உடலில் இரத்தம் உறைவு மற்றும் ஆபத்தான இரத்தக் கட்டிகளை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
- அதிக கொழுப்பு பித்தப்பையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி, பித்தப்பை கற்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
- நமது பின்னங்கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் முழுமையாக அடைபடும் பட்சத்தில் ரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இதனால் கால்களில் சாதாரணமாகவே வலி, நடக்கும்போது வலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US