சமூகத்தில் உங்கள் மரியாதை உயரணுமா? அப்போ இந்த பழக்கங்களை ஏற்படுத்திக்கோங்க
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் மற்றவர்கள் தங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
ஆனால் அனைவருக்கும் அவ்வாறு மரியாதை கிடைப்பதில்லை இதற்கு என்ன காரணம் என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
ஒருவருக்கு உயர் மரியாதை கொடுக்கப்படும் போது இன்னொருவருக்கு அது கிடைக்கவில்லை என்றால், அவர் செய்யும் ஏதோ ஒன்றை இவர் செய்யவில்லை என்று தானே அர்த்தம்?
அப்படி சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் தேவையும் அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
மரியாதையை உயர்த்தும் பழக்கங்கள்
சமூகத்தில் உங்களின் மதிப்பு மற்றும் மரியாதை உயர வேண்டும் என்றால், உங்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான பழக்கங்களில் ஒன்று யாருடனும் தேவையின்றி பேசாமல் இருப்பது. தேவையற்ற பேச்சு உங்களின் மரியாதையை குறைத்துவிடும்.
உங்களை ஒரு நிகழ்வுக்கு அழைக்கவில்லை என்றாலோ,அல்லது இறுதி தருணத்தில் அழைக்கின்றார்கள் என்றாலோ, அந்த நிகழ்வுக்கு செல்லாமல் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.அழைக்கப்படாத இடத்துக்கு செல்வது உங்கள் மரியாதையை அழிக்கும்.
உங்களுக்கு நெருக்கம் இல்லாதவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் பகிர்ந்துக்கொள்வது உங்களின் மதிப்பையும் மரியாதையையும் அவர்கள் மத்தியில் குறைத்துவிடும்.இந்த குணம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.
சிறிய விடயங்களுக்கும் கோபப்படுவது அல்லது அழுவது உங்களின் பலவீனத்தை மற்றவர்களின் மத்தியில் பறைசாற்றிவிடும். இது உங்களின் மரியாதைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.அதனை தவறியும் செய்யாதீர்கள்.
உங்களிடம் பேச விரும்பாத நபர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் திறமைகளையும், அறிவையும், நிதி நிலையையும் வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் போது உங்களின் மதிப்பு மற்றவர்கள் மத்தியில் தானாக உயரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |