ஆட்டுக்கால் சூப் Vs மூட்டு வலி: இதுல உண்மை என்ன? மருத்துவர் விளக்கம்
தற்போது மூட்டு வலி, முதுகு வலி பிரச்சனை உள்ளிட்ட நோய்களால் அவஸ்தைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
மூட்டு வலியால் அவதிப்பட்டால், அக்காலத்தில் ஆட்டுக்கால் சூப் வைத்து குடித்தால் சரியாகும் என எமது முன்னோர்கள் கூறுகிறார்கள். அதுவும் ஆட்டுக்காலை பக்குவமாக வேக வைத்து, மசாலாவை அரைத்து சேர்த்து அடிக்கடி குடித்து வந்தால் உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
இப்படி ஏகப்பட்ட கதைகள் இருக்கும் பட்சத்தில் உண்மையில் என்ன உண்மை என்பதனை மருத்துவர் ஒருவர் விளக்கமாக கூறுகிறார்.
அந்த வகையில், மூட்டுவலிக்கும், ஆட்டுக்கால் சூப்புக்கும் என்ன தொடர்பு என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஆட்டுக்கால் சூப்
அசைவ பிரியர்களுக்கு மிக பிடித்த உணவுகளில் ஒன்று தான் ஆட்டுக்கால் சூப். மட்டன் சாப்பிடுவதற்கும், ஆட்டுக்காலை சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மட்டனில் புரோட்டீன் அதிகம் உள்ளது.
அதே சமயம், ஆட்டுக்கால் சாப்பிடும் ஒருவருக்கு கொலாஜன், ஜெலாட்டின், கிளைகோஸ்அமினோ கிளைகான்கள், காண்ட்ராடின் போன்ற அனைத்து ஊட்டசத்துக்களும் கிடைக்கின்றன.
அதில் இருந்து கிடைக்கும் கொலாஜன் என்பது நமது திசுக்களில் உள்ள ஒருவிதமான புரோட்டீன் ஆகும். இது போன்று ஆட்டுக்காலை நீரில் கொதிக்க வைக்கும் போது சில வகையான அமினோ அமிலங்களான கிளைசீன் போன்றவையும் கிடைக்கும்.
மூட்டுவலி குறையுமா?
மூட்டு வலி உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் அதிகமாக குடித்து வந்தால், கொலாஜன் அளவு அதிகமாகும். இதனால் மூட்டுக்களில் உள்ள காயங்களை குறைத்து, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், “மூட்டு வலி உள்ள ஒரு குழுவினருக்கு ஆட்டுக்கால் சூப் கொடுக்கப்பட்டது. அப்போது மூட்டு வலிக்கான அறிகுறிகள் குறைந்துள்ளது. ஆட்டுக்காலில் உள்ள கொலாஜன், ஜெலாட்டின், கிளைசீன் என்னும் அமினோ அமிலம் போன்றவை மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும்.
அதிலும் குறிப்பாக ஆட்டுக்கால் சூப் வழக்கம் போல் செய்து குடிக்காமல் அதனை நீரில் போட்டு குறைவான தீயில் குறைந்தது 10-12 மணிநேரம் கொதிக்க வைக்கவும். அந்த சூப்பைக் குடிக்கும் போது ஆட்டுக்காலில் உள்ள அனைத்து சத்துக்களும் முழுமையாக உடலுக்கு கிடைத்து, மூட்டு வலி முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில் ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி பறந்துபோகும் என்பது உண்மை தான். அதுவும் ஆட்டுக்காலை பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சமைத்த விதத்தில் தான் இது சாத்தியமாகியுள்ளது.
அதாவது 10-12 மணிநேரம் குறைவான தீயில் ஆட்டுக்காலை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |