ஆட்டிறைச்சியில் இந்த முக்கியமான உறுப்புகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா....?
ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் பல்வேறு மருத்துவ பலன்கள் கிடைக்கின்றது.
எந்த பகுதியை சாப்பிடுவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கல்லீரல்
இது மல்டி விட்டமின் அடங்கியது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. உறுப்பு இறைச்சிகளிலேயே அதிக சக்தியை கொண்ட சக்தி கோபுரமாக விளங்குகிறது.
சிறு நீரகம்
மனிதனைப் போலவே மிருகங்களுக்கும் இரண்டு சிறு நீரகங்கள் உள்ளன. இவை நச்சுக்களையும் கழிவுகளையும் அகற்ற உதவுகிறது.
ஈரல்
உறுப்பு இறைச்சிகளில் மிகவும் வலிமைமிக்கது ஈரல் தான். இதில் உயர்த்தர புரதம், வைட்டமின் எ, ஃபோலிக் அமிலம், கிரோமியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. ஈரல் உங்கள் இதயத்திற்கு வலு சேர்க்கிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
சிறுநீரகம்
ஆடு அல்லது மாட்டின் சிறுநீரகம் சாப்பிடுவதனால் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து கிடைக்கிறது. மற்றும் இதை சாப்பிடுவதன் மூலம் நிறைந்த புரதச்சத்து கிடைக்கிறது. இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் இதயத்திற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இடுப்புக்கும் சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும்.
கணையம் மற்றும் மண்ணீரல்
கணையத்தில் நிறைய செலினியம் மற்றும் துத்தநாகம் சத்துகள் இருக்கின்றன. இது உங்கள் ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் அவசியமானது ஆகும்.
மூளை
மூளையில் உயர்ரக ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து இருக்கிறது. ஃபாஸ்ஃபேடிடில்செரீன் மற்றும் ஃபாஸ்ஃபேடிடில்சொலின் போன்ற நரம்புக்கு வலிமை அளிக்கும் ஊட்டச்சத்துகள் மூளையில் இருந்து கிடைகின்றன. இவை, மூளை மற்றும் முதுகெலும்பிற்கு வலு சேர்க்கிறது. மூளை கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை.
ஆட்டின் கண்
ஆட்டின் கண் நம் கண்களுக்கு அதிக பலத்தை கொடுக்கிறது. பார்வை அதிகரிக்க உதவுகிறது.
ஆட்டின் நெஞ்சு
பகுதி கபத்தை போக்குகிறது, நமது மார்பு பலத்தை கொடுக்கிறது. உடலில் புண் இருந்தால் குணமாக்குகிறது.
ஆட்டின் இதயம்
நமது மன ஆற்றலை பெருக்க உதவுகிறது. இதயத்திற்கு பலத்தை தருகிறது.